வன மகோத்சவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வன மகோத்சவம் (Van Mahotsav) என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் சூலை முதல் வாரத்தில் கொண்டாடப்படும் ஒரு வார மரம் நடும் திருவிழாவாகும்.

வரலாறு[தொகு]

முதல் இந்திய தேசிய மரம் நடும் வாரம் 1947 சூலை 20 முதல் 27 வரை பஞ்சாபி அரசு ஊழியரும், தாவரவியலாளரும், வரலாற்றாசிரியருமான மொகிந்தர் சிங் ரந்தவா என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்டது. பல்வேறு நாடுகளில் வன வாரம், மரங்களின் திருவிழா அல்லது ஆர்பர் நாட்கள் பற்றிய யோசனைகளால் ரந்தாவா ஈர்க்கப்பட்டார். 1947ஆம் ஆண்டு சூலை 20 ஆம் தேதி முதல் நிகழ்வானது காலை தில்லியின் ஆணையர் குர்சித் அகமத் கான் அவர்களால் ஆத்தி மரக்கன்றுகள் நடப்பட்டது. மதியம், இடைக்கால அரசின் துணைத் தலைவர் நேரு தலைமையில் புராண கிலாவில் மற்றொரு விழா நடைபெற்றது. மற்றொரு நாள் "லேடீஸ் டே" என்று அழைக்கப்படும் நாளில் மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவி உட்பட பலருடன் குதுப்மினார் வளாகத்தில் நடவுகளில் ஈடுபட்டார்.[1] 1950 ஆம் ஆண்டு உணவு மற்றும் வேளாண்மை அமைச்சர் கே. எம். முன்ஷியால் இந்த பாரம்பரியம் தொடரப்பட்டு தேசிய நடவடிக்கையாக மாற்றப்பட்டது. அவர் இதை "வன மகோத்சவம்" என்ற பெயரில் மாற்றி சூலை முதல் வாரத்தில் தொடர நடவடிக்கை மேற்கொண்டார்.[2][3]

நோக்கங்கள்[தொகு]

இந்தியர்களை மரம் நடும் மற்றும் பராமரிப்பை ஊக்குவிப்பதன் மூலம், திருவிழா அமைப்பாளர்கள் நாட்டில் அதிக காடுகளை உருவாக்க விரும்பினார்கள். இது மாற்று எரிபொருட்களை வழங்குகிறது. உணவு வளங்களின் உற்பத்தியை அதிகரிக்கும். உற்பத்தியை அதிகரிக்க வயல்களைச் சுற்றி தங்குமிடங்களை உருவாக்கும். கால்நடைகளுக்கு உணவு மற்றும் நிழலை வழங்குகிறது. நிழல் மற்றும் அலங்கார நிலப்பரப்புகளை வழங்குகிறது. வறட்சியைக் குறைக்கிற. மேலும், மண் அரிப்பைத் தடுக்க உதவுகிறது. சூலை முதல் வாரம் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மரங்களை நடுவதற்கு சரியான நேரமாகும். ஏனெனில் அது பருவமழையுடன் ஒத்துப்போகிறது.

பட வரிசை[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Chatterjee, U.N. (1947). "Delhi celebrates tree plantation week". Indian Farming 8 (9): 466–468. 
  2. Randhawa, M.S. (1957). Flowering trees in India. New Delhi: Indian Council of Agricultural Research. பக். 130–142. https://archive.org/details/floweringtreesin032196mbp/page/n127/mode/1up. 
  3. "Tracing the Origins of Van Mahotsav, a Week-Long, Nation-Wide Festival That's All About Trees!". The Better India. 21 July 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வன_மகோத்சவம்&oldid=3349950" இலிருந்து மீள்விக்கப்பட்டது