வன்யா மிஸ்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வன்யா மிஸ்ரா (Vanya Mishra) (பிறப்பு 27 பிப்ரவரி 1992) ஓர் இந்தியப் பொறியாளரும், தொழில்முனைவோரும், முன்னாள் நடிகையும், அழகிப் போட்டிப் பட்டம் வென்றவரும் ஆவார். இவர் 2012இல் பெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட்[1] போட்டியில் பட்டம் பெற்றார்.

வன்யா, பஞ்சாபின் ஜலந்தரில் பிறந்தார். சண்டிகரில் வளர்ந்தார். பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் மின் பொறியியல் படித்தார்.[2] [3] ஆகத்து 2012 இல் சீனாவில் நடந்த உலக அழகி 2012 நிகழ்ச்சியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். அதில் இவர் 5வது இடத்தை அடைந்தார். ஆனால் இவர் அப்போட்டியில் மிஸ் மல்டிமீடியா , பியூட்டி பர்பஸ் பட்டங்களை வென்றார். தனிப்பட்ட நேர்காணல் சுற்றில் அதிக மதிப்பெண்களைப் பெற்று, இரண்டு துணைப் போட்டிகளை மீண்டும் மீண்டும் வென்ற பிறகு, மிஸ் வேர்ல்ட் போட்டியில் இவர் மதிப்பெண்களில் முன்னிலை வகித்தார்.[4]

இவரது பெரும்பாலான சமகாலத்தவர்களைப் போலல்லாமல், பல்வேறு பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி சலுகைகளை மறுத்த பிறகு, இவர் தனது தொழில்முனைவோர் கனவைத் தொடர முடிவு செய்தார். இவர் முன்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தொடங்கப்பட்ட இவரது ஆடை வடிவமைப்பு வலைதளத்தின் இணை நிறுவனராகவும் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார்.[5]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இந்திய இராணுவ அதிகாரி, மறைந்த தளபதி நவநீத் மிஸ்ரா மற்றும் வேத் மிஸ்ரா ஆகியோருக்கு 27 பிப்ரவரி 1992 அன்று இந்தியாவின் ஜலந்தரில் வன்யா பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை சண்டிகரில் முடித்தார். மேலும், பள்ளியில் முதலிடம் பெற்றார். பின்னர் இவர் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் மின் பொறியியல் பயின்றார். 2014இல் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றார்.

மிஸ் இந்தியா வேர்ல்ட் 2012[தொகு]

சனவரி 2012 இல், 19 வயதில், இவர் பல மாநில சுற்றுகளை வென்ற பிறகு அகில இந்திய வெற்றியாளர் மிஸ் டாபர் ரோஸ் கிளோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் பெமினா மிஸ் இந்தியா 2012 இல் முதல் 20 இடங்களுக்குள் தகுதி பெற்று நுழைந்தார். மார்ச் 30, 2012 அன்று, மகாராட்டிராவின் மும்பையில் நடந்த ஒரு விழாவில், பாண்டலூன்ஸ் பெமினா மிஸ் இந்தியா உலகப் பட்டத்தை வென்றார். நடுவர் குழுவில் ஏக்தா கபூர், சஞ்சீவ் பஜாஜ், சோனு நிகம், ஹர்பஜன் சிங், சாக்ஷி தன்வர், ரோஹித் ஷெட்டி போன்ற பிரபலமானவர்கள் இருந்தனர். இவர், மேபெலின் மிக அழகான கண்கள், மிக அழகான தோல் மற்றும் மிகவும் புகைப்படங்களுக்கு அழகாகத் தோற்றமளிப்பவர் என்ற 3 முக்கிய பட்டங்களை வென்றார். இவரது இறுதி கேள்வி பதில் போட்டியில், "நீங்கள் ஆயிரம் ஏழைக் குழந்தைகளுக்கு உணவளிக்க அல்லது ஆயிரம் வேலையில்லாதவர்களை வேலைக்கு அமர்த்த விரும்பினால், நீங்கள் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள், ஏன்" என்ற கேளிவிக்கு; இந்த இரண்டு குழந்தைகளும் அப்பாவிகளாகவும், தங்களுக்கு உதவி கிடைக்காதவர்களாகவும் இருப்பதால், உண்மையாகவே நான் குழந்தைகளுக்கு உணவளிப்பேன் என்று இவர் பதிலளித்தார். இந்த பதில் உலக அழகி அமைப்பின் தலைவர் திருமதி ஜூலியா மோர்லியின் இதயத்தைத் தொட்டது அவர் மதிப்பிற்குரிய விருந்தினர்களில் ஒருவராக இருந்தார். இந்தப் போட்டியில் வெனிசுலாவின் முன்னாள் உலக அழகி இவியான் சார்கோசு முடிசூடினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vanya Mishra crowned Miss India World, 2012". India Today. 2 April 2012. http://indiatoday.intoday.in/story/vanya-mishra-crowned-miss-india-world-2012/1/182682.html. 
  2. "Miss India changed my life completely: Vanya Mishra - Beauty Pageants - Indiatimes". 23 June 2014. http://beautypageants.indiatimes.com/miss-india/Miss-India-changed-my-life-completely-Vanya-Mishra/articleshow/36763146.cms. பார்த்த நாள்: 15 August 2016. 
  3. "Punjab Engineering College students eager to welcome Vanya Mishra back". 2 April 2012. http://timesofindia.indiatimes.com/city/chandigarh/Punjab-Engineering-College-students-eager-to-welcome-Vanya-Mishra-back/articleshow/12498814.cms. பார்த்த நாள்: 21 February 2017. 
  4. "Miss World 2012: Vanya Mishra loses the pageant to Miss China". பார்க்கப்பட்ட நாள் 2012-08-20.
  5. Khan, Taslima (6 March 2017). "Gurgaon-based SummerLabel raises angel funding". https://economictimes.indiatimes.com/small-biz/money/gurgaon-based-summerlabel-raises-angel-funding/articleshow/57492463.cms. பார்த்த நாள்: 9 April 2018. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வன்யா_மிஸ்ரா&oldid=3285060" இலிருந்து மீள்விக்கப்பட்டது