வன்பொருள் சுதந்திர நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வன்பொருள் சுதந்திர தினம் 2012 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. 2012 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தின் 20ஆம் நாள் அனுசரிக்கப்பட்டது.

நோக்கம்[தொகு]

  1. கட்டுப்பாடற்ற வன்பொருள் வடிவமைப்பைக் குறித்து மக்களிடம் தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  2. கட்டுப்பாடற்ற வன்பொருளுக்கான பயனர்களின் பங்களிப்பை ஊக்குவித்தல்.
  3. கட்டுப்பாடுஅற்ற வன்பொருள் மீது ஆர்வம் மற்றும் அதை சார்ந்த புதிய சிந்தனைகளையும் கொண்டு உள்ளவர்களுக்கு ஒரு பொதுவான மேடை உருவாக்க இந்த நாள் பயன் உள்ளதாக இருக்கும் .

நிகழ்வு அட்டவணை[தொகு]

யார் வேண்டுமானாலும் வன்பொருள் சுதந்திர தின நிகழ்வு ஏற்பாடு செய்யலாம் .இந்த நிகழ்வு இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற திடமான நிகழ்வு அட்டவணையும் இல்லை .எண்மருவி சுதந்திர அறகட்டளை உலகளாவிய அளவில் இந்த நிகழ்வை நடத்துகிறார்கள்.இந்த நிகழ்வின் போது நடைபெறும் சில பொதுவான நடவடிக்கைகள்

  • வெவ்வேறு கட்டுப்பாடு அற்ற வன்பொருள் பற்றிய பயிலரங்கு .
  • கட்டுப்பாடு அற்ற வன்பொருள் செயல் திட்ட செய்முறை விளக்கம் .
  • புதிய கட்டுப்பாடு அற்ற வன்பொருள் செயல் திட்ட அறிமுகமும் அதன் செய்முறை விளக்கம்.

கட்டுப்பாடு அற்ற வன்பொருள்[தொகு]

கட்டுப்பாடு அற்ற வன்பொருள் யாதெனில் அதன் முழு வடிவமைப்பு அந்த சாதனத்துடன் பகிரவும், மாற்றிஅமைக்கவும் ,அவ்வாறு மாற்றி அமைகபட்டதை பகிரவும் உரிமை அளிக்கப்பட வேண்டும் .

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வன்பொருள்_சுதந்திர_நாள்&oldid=3452771" இலிருந்து மீள்விக்கப்பட்டது