உள்ளடக்கத்துக்குச் செல்

வன்னி எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வன்னி எலி
சுவரிதழ்
இயக்கம்தமிழியம் சுபாஸ்
தயாரிப்புதமிழியம் சுபாஸ்
கதைதமிழியம் சுபாஸ்
இசைநிதர்சன்
நடிப்புசுண்டெலி (சிந்து, துலானி)
ஒளிப்பதிவுதமிழியம் சுபாஸ்
படத்தொகுப்புதமிழியம் சுபாஸ்
வெளியீடு9 செப்டம்பர் 2009 (2009-09-09)(நார்வே)
ஓட்டம்10 நிமிடங்கள்
நாடுநார்வே
மொழிதமிழ், சிங்களம்

வன்னி எலி (Vanni Mouse) என்பது புலம்பெயர் இலங்கைத் தமிழரான தமிழியம் தயாரித்து இயக்கிய ஒரு குறும்படம் ஆகும். இது ஒரு சர்வதேச விழாவில் சிறந்த விருதைப் பெற்றது. 2010 ஆம் ஆண்டு டாக்காவில் ஒன்பது நாள் நடந்த 11வது பன்னாட்டு குறும்படம் மற்றும் சுயாதீன திரைப்பட விழாவில் (ISIFF) புனைகதை பிரிவில் சிறந்த திரைப்படத்துகான விருதைப் பெற்றது.[1] [2] இந்த விருது குறித்து தமிழ்நெட்டிடம் கருத்து தெரிவித்த லண்டனை தளமாகக் கொண்ட ஈழவர் திரைப்படக் குழுவின் வழக்கறிஞர் எஸ். ஜே. ஜோசப்[3] இலங்கைத் தமிழ்க் கலைஞர் ஒருவர் பன்னாட்டு திரைப்பட விழாவில் விருது பெறுவது இதுவே முதல் முறை என்று கூறினார். [4]

"உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை, இப்படம் தேசிய ஒருமைப்பாட்டின் பெயரால் நிகழ்த்தப்படும் அரசவன்முறைக்கு எதிரானதாக உள்ளது. இந்தச் செய்தியைச் சொல்ல, இயக்குநர் காட்டுயிர் ஒளிப்பதிவு, அடிமன வெளிப்பாட்டியம், யதார்த்த நிகழ்வு ஆகியவற்றின் சுவாரசியமான கலவையான ஒரு வடிவத்தைத் தேர்ந்தெடுத்தார். சில எலிகளின் பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு மனித துயரத்தைக் காட்டுவதாக உள்ளது. போர் எதிர்ப்பு படத்திற்கான இந்த அணுகுமுறை மிகவும் அசலாக உள்ளது" என்று விருது அறிவிப்பின் போது நடுவர் குழு உறுப்பினர்களான ஷாஜி என். கருண், மசிஹுதீன் ஷேக்கர், அபு சயீத் ஆகியோர் தெரிவித்தனர். [5]

சுருக்கம்

[தொகு]

வன்னிக் காட்டில் வசிக்கும் இரு எலிகளின் பயணத்தை பின் தொடர்ந்து செல்வதுதுதான் வன்னி எலி குறும்படம். இணைபிரியா இரு எலிகளும் தீவாய்ப்பாக வவுனியாவில் ( இலங்கை ) அமைந்துள்ள ஒரு தடுப்பு முகாமில் ( மாணிக் பண்ணை ) வந்து சேர்கின்றன. அங்கு இலட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தால் சிறை வைக்கபட்டுள்ளனர். இந்த இரண்டு எலிகளும் முள்வேலிகளுக்குப் பின்னால் உள்ள பல அப்பாவி பொதுமக்களின் துயரத்தைக் காண்கின்றன. அந்தத் துயரங்கள் வெளியுலகம் அறியாத யாராலும் வெளிஉலகத்துக்கு கொண்டுவராத உண்மைகளாகவே உள்ளன. அந்த இணை எலிகளும் அந்த பயங்கரமான சூழலில் இருந்து தப்பினவா என்பதுதான் இந்த குறும்படத்தின் உச்சக்கட்டம் .

விருதுகள்

[தொகு]

அதிகாரப்பூர்வ தேர்வு

[தொகு]

கல்வியியல் பகுப்பாய்வு

[தொகு]

இந்தத் திரைப்படம் பல்வேறு கல்வியியல் படைப்புகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது:

மேற்கோள்கள்

[தொகு]
  1. "11th International Short and Independent Film Fest ends". The Daily Star. 15 March 2010. https://www.thedailystar.net/news-detail-130088. 
  2. "Timeout". www.newagebd.com. Archived from the original on 2010-03-22.
  3. "TamilNet - 'Vanni Mouse' wins best fiction award in international film festival".
  4. "Tamil Cinema News | Tamil Movie Reviews | Tamil Movie Trailers - IndiaGlitz Tamil". Archived from the original on 23 March 2010.
  5. "Recitation of Jury". TamilNet. Retrieved 28 March 2025.
  6. "1st NTFF 2010 - "Vanni Mouse" by director Tamiliam Subas from Norway received the best short film award".
  7. Gaana, J. Nair (Sep 2013). "Visual Culture, Spectatorship and Humanitarian Disaster: Vanni Eli and the Representation of the Sri Lankan Civil War". ResearchGate. கிறிஸ்து பல்கலைக்கழகம், Bangalore, India. Retrieved 27 March 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வன்னி_எலி&oldid=4343602" இலிருந்து மீள்விக்கப்பட்டது