வன்னிக்கோனந்தல்

ஆள்கூறுகள்: 8°59′48″N 77°37′09″E / 8.9965856°N 77.6191674°E / 8.9965856; 77.6191674
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வன்னிக்கோனேந்தல்
—  ஊராட்சி  —
வன்னிக்கோனேந்தல்
இருப்பிடம்: வன்னிக்கோனேந்தல்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°59′48″N 77°37′09″E / 8.9965856°N 77.6191674°E / 8.9965856; 77.6191674
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் மானூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி தென்காசி
மக்களவை உறுப்பினர்

தனுஷ் எம். குமார்

சட்டமன்றத் தொகுதி சங்கரன்கோவில்
சட்டமன்ற உறுப்பினர்

இ. ராஜா (திமுக)

மக்கள் தொகை 8,000 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

வன்னிக்கோனேந்தல் (ஆங்கிலம் : Vannikonandhal) இந்தியாவின் தென்பகுதியில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டம், மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். [4] இந்த ஊர் திருநெல்வேலியில் இருந்து வடக்கே 30 கி.மீ தொலைவில் திருநெல்வேலிக்கும் - சங்கரன்கோவிலுக்கும் இடையே அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

தற்போது வாழும் மக்களின் முந்தைய தலைமுறையினர் இங்கு வருவதற்கு முன்னால் வன்னிய கோனார்என்ற சமுகத்தை சார்ந்த மக்கள் இங்கு வாழ்ந்து வந்தாகவும் அதனால் இந்த ஊர் வன்னிக்கோனேந்தல் எனப் பெயர் பெற்றது என்றும் கூறுவர் இந்த பெயருக்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. இதற்கு முன் வன்னி மரங்கள் இங்கு அதிகமாக காணப்பட்டதால் இந்த ஊர் வன்னிக்கோனேந்தல் என்ற பெயர் பெற்றது என்றும் கூறுவர்.

காலநிலை மற்றும் பொருளாதாரம்[தொகு]

இங்கு காலநிலை எப்போதும் மிதமான வறண்ட சூழ்நிலையே காணப்படும். இங்கு மழை என்பது பருவ மழை மட்டுமே, மற்ற நேரங்களில் வெப்பமாகவே காணப்படும் இங்கு உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர் கிணற்று நீர் பாசனமே இங்கு முக்கியமான ஒன்றாகும் சில நேரங்களில் இங்கு தண்னீர் பற்றாக்குறை ஏற்படுவதும் உண்டு.

இங்கு பருத்தி, நெல் பயிர்வகைகளும் பயிடப்படுகின்றன . இது செம்மண் தரை என்பதாலும் .இந்த மண்ணிற்கு ஏற்ற பயிர் வகைகள் நன்றாக விளையும். இங்கு நீர் ஆதாரமாக இந்த ஊரின் மேற்கு பகுதியில் அமைந்து உள்ள மிகப்பெரிய குளமாகும். இந்த குளம் அருகில் கிணறுகளுக்கு தண்ணீரை வழங்குகிறது. இங்கு விளைவிக்கப்படும் பொருள்கள் அருகில் உள்ள சங்கரன்கோவில் மற்றும் திருநெல்வேலியில் உள்ள சந்தைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

சமயங்கள் - ஆலயங்கள்[தொகு]

இங்கு இந்து மதத்தை மக்களே அதிகமாக வாழ்கிறார்கள் அதற்கு அடுத்தாக கிறித்த்துவ மக்களும் காணப்படுகின்றனர் மற்ற மதத்தை சார்ந்த மக்கள் சிலரும் காணப்படுகிறார்கள்.

இங்கு காணப்படும் சில பிரபலமான கோயில்கள்:-

  • சூட்டுலிங்க அய்யானர் கோவில்
  • பெரியதம்பிரான் கோவில்
  • மருதுடையார் கோவில்
  • தம்புராட்டி அம்மன் கோவில்
  • உய்காட்டு (சுடலை) மாடசாமி கோவில்
  • கருப்பசாமி கோவில்

மேலும் இந்த ஊரின் மேற்கு பகுதியில் உள்ள மலைப்பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் காணப்படுகிறது. இக்கோவிலில் முக்கியமான நாட்களிலும் மற்றும் சனிக்கிழமை தோறும் இங்கு பூசை நடக்கும். சனிக்கிழமை மக்கள் அதிகமாக இங்குசென்று வாயு பகவானை வழிபடுவார்கள்.

அரசு அலுவலங்கள் /மருத்துவமனை/பள்ளிகள்[தொகு]

  • அரசு ஆரம்ப பள்ளி
  • அரசுமேல்நிலைபள்ளி
  • அரசு மருத்துவமனை
  • கிராம நிர்வாக அலுவலகம்
  • அஞ்சல் நிலையம்
  • கால்நடை மருத்துவமனை

போக்குவரத்து வசதிகள்[தொகு]

இந்த ஊர் சங்கரன்கோயில் - திருநெல்வேலிக்கிடையே அமைந்துள்ளதால் பேருந்து வசதி நன்றாக உள்ளது. இங்கிருந்து எந்த ஊர்களுக்கும் பேருந்து வசதி உண்டு. தற்போது திருநெல்வேலி-ராஜபாளையம் இடையே நான்குவழிசாலை அமைய இருப்பதால் இன்னும் எளிதாகவும் விரைவாகவும் எங்கும் சென்றுவரமுடியும்.

மேலும் இங்கு அரசு / தனியார் பேருந்துகள் அனைத்தும் இங்கு நின்றே செல்லூம் மற்றும் அருகில் உள்ள ஊர்களுக்கு சொல்லுவதற்கு பேருந்துகளும் ஆட்டோகளும் காணப்படுகிது.

கல்வி[தொகு]

இங்குள்ள இளம் வயதினர் பெரும்பாலும் அடிப்படைக் கல்வி அறிவை பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். பெரும்பாலான ஆண்கள் காவல்துறை மற்றும் இராணுவ துறைகளுக்கும் சென்றுள்ளனர்.

பாதுகாப்பு[தொகு]

மக்களின் பாதுகாப்பிற்காக அருகில் உள்ள ஊரான தேவர்குளத்தில் காவல் நிலையம் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Sankarankovil Taluk - Revenue Villages". National Informatics Centre-Tamil Nadu. Archived from the original on 2013-08-08. பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வன்னிக்கோனந்தல்&oldid=3650498" இலிருந்து மீள்விக்கப்பட்டது