வனேடியோகார்ப்போலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வனேடியோகார்ப்போலைட்டு
Vanadiocarpholite
பொதுவானாவை
வகைசிலிக்கேட்டு கனிமம்
வேதி வாய்பாடுMn+2V+3AlSi2O6(OH)4
இனங்காணல்
நிறம்வெளிர்-வைக்கோல் மஞ்சள், மஞ்சளும் பழுப்பும்
படிக இயல்புஊசிவடிவ படிகக் கொத்துகள் விரிசலிழை நிரப்பிகளாக
படிக அமைப்புநேர்சாய்சதுரம்
பிளப்பு{010} இல் தெளிவாக
விகுவுத் தன்மைநெகிழும்
மிளிர்வுபட்டுப் போல் பளபளப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα=1.684, nβ=1.691, nγ=1.7
இரட்டை ஒளிவிலகல்0.0160
மேற்கோள்கள்[1][2]

வனேடியோகார்ப்போலைட்டு (Vanadiocarpholite)Mn+2V+3AlSi2O6(OH)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் வனேடியத்தின் சிலிக்கேட்டு வகைக் கனிமமாகும். வைக்கோல் மஞ்சள் நிறத்தில் நேர்சாய்சதுர படிகவடிவில் இது படிகமாகிறது. வனேடியம் மிகுந்திருக்கும் கார்ப்போலைட்டு வகை கனிமமாக (Mn+2Al2Si2O6(OH)4) இருப்பதால் இதை வனேடியோகார்ப்போலைட்டு என்ற பெயரால் அழைக்கிறார்கள்.

தோற்றம்[தொகு]

முதன் முதலில். இத்தாலி நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள இலிகுரியா மண்டலத்தின் கெனோவா மாகாணத்தில் 2005 ஆம் ஆண்டு வனேடியோகார்ப்போலைட்டு கண்டறியப்பட்டது. இங்குள்ள கிராவெக்லியா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மோலினெல்லோ சுரங்கத்தில் இக்கனிமம் வெட்டியெடுக்கப்படுகிறது. [2] மாங்கனீசு தாதுப் படிவுகளில் செர்ட்டு வகை படிவுப் பாறை புதைபடிவச் சேர்மமாக வனேடியோகார்ப்போலைட்டு கிடைக்கிறது. [1]

வேதி இயைபு[தொகு]

வனேடியோகார்போலைட்டில் பின்வருமாறு தனிமங்கள் சேர்ந்துள்ளன:[1]

மாங்கனீசு 15.56% Mn 20.09% MnO
அலுமினியம் 7.64% Al 14.44% Al2O3
வனேடியம் 14.43% V 21.23% V2O3
சிலிக்கான் 15.91% Si 34.04% SiO2
ஐதரசன் 1.14% H 10.21% H2O
ஆக்சிசன் 45.32% O

மேற்கோள்கள்[தொகு]