வனேடியம்-காலியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வனேடியம்-காலியம் (Vanadium-gallium) (V3Ga) என்பது வனேடியமும், காலியமும் இரண்டையும் சேர்த்து உருவாக்கப்படும் ஒரு மீகடத்தி கலப்புலோகமாகும். பெரும்பாலும் இவ்வுலோகக் கலவை மீகடத்து மின்காந்தங்களில் உயர்புல புகுத்துச் சுருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

வனேடியம்-காலியம் வார்ப்பட்டை மீகடத்து காந்தங்களில் பயன்படுத்தப்படுகிறது (17.5 டெசுலாக்கள் அல்லது 175000 காச்சுகள்) மீகடத்தும் ஏ15 முக வனேடியம்-காலியத்தின் கட்டமைப்பு பொதுவாகப் பயன்பாட்டிலுள்ள Nb3Sn மற்றும் Nb3 Ti. கலப்புலோகங்களின் கட்டமைப்பை ஒத்துள்ளது [1]. Nb, Ta, Sn, Pt மற்றும் Pb போன்ற உயர் அணு எண் தனிமங்களுடன் இக்கலப்புலோகத்தை கலப்பதன் மூலமாக உயர் புலப் பண்புகளை மேம்படுத்த முடியும்.[2]

மீகடத்துப் பண்புகள்[தொகு]

  • மாறுநிலை வெப்பம் (Tc) : ~14.2 கெல்வின் [3]
  • உயர் மாறுநிலைப் புலம் (Hc2) : 19 டெசுலாவிற்கு மேல்.

மீகடத்து கம்பி அல்லது மீகடத்து வார்ப்பட்டை புனைவு[தொகு]

திடநிலை வீழ்படிவாக்கல் முறையில் வனேடியம்-காலியம் கம்பிகள் உருவாக்கப்படுகின்றன[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. Markiewicz, W.; Mains, E.; Vankeuren, R.; Wilcox, R.; Rosner, C.; Inoue, H.; Hayashi, C.; Tachikawa, K. (1977). "A 17.5 Tesla superconducting concentric Nb3Sn and V3Ga magnet system". IEEE Transactions on Magnetics 13 (1): 35–37. doi:10.1109/TMAG.1977.1059431. 
  2. Tedrow, P. M.; Meservy, R. (1984), Improvement in magnetic field properties of vanadium-gallium superconductors by enhancement of spin-orbit scattering
  3. Decker, D. L. Laquer, H. L. (1969), Magnetization Studies on Superconducting Vanadium‐Gallium, doi:10.1063/1.1658081CS1 maint: multiple names: authors list (link)
  4. Hong, Minghwei (1980), A15 SUPERCONDUCTORS THROUGH DIRECT ""SOLID-STATE"" PRECIPITATION: V3Ga AND N63AI

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வனேடியம்-காலியம்&oldid=2747867" இருந்து மீள்விக்கப்பட்டது