வனிதா ஜக்தியோ போரதே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வனிதா ஜக்தியோ போரதே
2022 இல் போரதே
பிறப்பு25 மே 1975 (1975-05-25) (அகவை 48)
அறியப்படுவதுபாம்பு மீட்பாளர்
விருதுகள்நாரி சக்தி புரஸ்கார் (2020)

வனிதா ஜக்தியோ போரதே (பிறப்பு 25 மே 1975) என்பவர்இந்தியப் பாதுகாவலர் மற்றும் வனவிலங்குப் பாதுகாப்பில் பணிபுரியும் சோயரே வான்சேரே பலநோக்கு அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். இவர் பாம்புகளை மீட்பதில் நிபுணத்துவம் பெற்றவர். "இந்தியாவின் முதல் பெண் பாம்பு தோழி" என்று அங்கீகரிக்கப்பட்டார். போரதேவின் பாம்புகளைப் பாதுகாக்கும் முயற்சிகளைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு நாரி சக்தி விருது வழங்கியது.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

வனிதா ஜக்தியோ போரதே 25 மே 1975-ல் பிறந்தார்.[1] இவர் தனது கணவருடன் இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள புல்தானாவில் வசித்து வருகிறார்.[2][3]

பணி[தொகு]

உள்ளூர் சூழலில் தனது ஆர்வத்தைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களுடன், பண்ணையில் வளர்க்கப்பட்டதால், வனவிலங்குகளுடன் எளிதாக இருக்க போரதே கற்றுக்கொண்டார்.[4] இவர் பன்னிரண்டாம் வயதில் விசப் பாம்புகளைக் கடிக்காமல் பிடிக்க ஆரம்பித்தார்.[3] இவர் சோயரே வான்சேரே பலநோக்கு அறக்கட்டளையை நிறுவினார். இது சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுப்பதிலும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகிறது.[5] போரதே 50,000க்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டு, கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பெற்றுள்ளார்.[2] இவர் பாம்புகள் மீது குறிப்பாக இரக்கமுள்ளதோடு தேனீக்களுடனும் அனுபவமும் கொண்டவர்.[4]

பாம்புக் கடிக்குச் சிகிச்சையளிப்பது எப்படி என்பதை போரதே மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.[2] மேலும் பாம்புகளைப் பற்றிய யதார்த்தமான தகவல்களை வழங்குவதன் மூலம் பாம்புகள் பற்றிய பயம் குறைக்கும் (ஓபிடியோபோபியாவை) நோக்கத்தைக் கொண்டிருந்தார்: இந்தியாவில் உள்ள பாம்புகளில் பத்துச் சதவிகிதம் மட்டுமே விடமானது. மேலும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் நச்சு எதிர்ப்பு மருந்துகள் இலவசமாகக் கிடைக்கின்றன.[4]

விருதுகள் மற்றும் அங்கீகாரம்[தொகு]

இந்தியா அஞ்சல் துறை போரதே சாதனைகளை அங்கீகரித்து இவரது உருவப்படத்துடன் கூடிய முத்திரையை வெளியிட்டது.[6] அனைத்துலகப் பெண்கள் நாளில் வழங்கப்படும் 2020ஆம் ஆண்டிற்கான நாரி சக்தி விருதினைத் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து 2022 ஆம் விருதைப் பெற்றார்.[5][7] உள்நாட்டில் "பாம்பு பெண்" என்று அழைக்கப்படும் போரதே "இந்தியாவின் முதல் பெண் பாம்பு தோழி" என்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.[8][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pandey, Bhavna (8 March 2022). "राष्ट्रपति ने सांप को रेसक्‍यू करने वाली देश की पहली महिला बचावकर्ता वनिता जगदेव को दिया नारी शक्ति सम्‍मान" (in hi). Oneindia. https://hindi.oneindia.com/news/india/president-honored-the-country-s-first-woman-rescuer-vanitha-jagdev-borade-with-the-nari-shakti-award-668352.html. 
  2. 2.0 2.1 2.2 "3 Maharashtra women honoured with Nari Shakti Puraskar including 'First woman snake-rescuer of India'" (in en). Free Press Journal. 8 March 2022 இம் மூலத்தில் இருந்து 10 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220310162717/https://www.freepressjournal.in/mumbai/3-maharashtra-women-honoured-with-nari-shakti-puraskar-including-first-woman-snake-rescuer-of-india. 
  3. 3.0 3.1 "वश में किए 51 हजार नाग... ये हैं 'नाग मोहिनी'" (in hi). News18 हिंदी. 14 October 2017 இம் மூலத்தில் இருந்து 10 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220310162725/https://hindi.news18.com/dlxczavtqcctuei/news18/comscore/pv-candidate.html?252939. 
  4. 4.0 4.1 4.2 "Nari Shakti Puraskars honour Nari Shakti's triumph over social, economic and physical challenges". Press Information Bureau. பார்க்கப்பட்ட நாள் 12 March 2022.
  5. 5.0 5.1 "Leaders cut across political lines to hail Indian women achievers". Orissa Post. 8 March 2022. பார்க்கப்பட்ட நாள் 30 April 2022.
  6. "Snake rescuer, organic farmer, entrepreneur - 29 women conferred Nari Shakti award". The New Indian Express. 8 March 2022 இம் மூலத்தில் இருந்து 8 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220308113823/https://www.newindianexpress.com/nation/2022/mar/08/snake-rescuer-organic-farmer-entrepreneur---29-women-conferred-nari-shakti-award-2427750.html. 
  7. 7.0 7.1 Kainthola, Deepanshu (8 March 2022). "President Presents Nari Shakti Puraskar for the Years 2020, 2021". Tatsat Chronicle இம் மூலத்தில் இருந்து 9 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220309001953/https://tatsatchronicle.com/president-presents-nari-shakti-puraskar-for-the-years-2020-2021/. 
  8. Deshpande, Chaitanya. "'Saanpwali bai' from Buldhana gets prestigious 'Nari Shakti' award". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 19 April 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனிதா_ஜக்தியோ_போரதே&oldid=3684302" இலிருந்து மீள்விக்கப்பட்டது