வனப் பாதுகாப்புத் துறை (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வனப் பாதுகாப்புத் துறை (Department of Forest Conservation) இலங்கையில் வனத்துறைக்கு பொறுப்பான ஒரு அமைச்சகம் அல்லாத அரசு துறை ஆகும். [1] இலங்கையின் காடுகளைப் பாதுகாப்பதும் விரிவுபடுத்துவதும் இத்துறையின் நோக்கமாகும். [2] பொது வனப் பாதுகாப்பாளர் வனப் பாதுகாப்புத் துறையின் தலைவர் ஆவார். இலங்கையின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வள அமைச்சகத்தின் கீழ் இத்துறை வருகிறது.

பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் சட்ட விரோதமாக வேட்டையாடுதல் மற்றும் மரம் வெட்டுதல் ஆகிய செயல்களைத் தடுப்பதற்கு காவல் துறைக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை கைது செய்யும் அதிகாரம் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

காடுகள்[தொகு]

வனப் பாதுகாப்புத் துறையால் நிர்வகிக்கப்படும் சில காடுகள்:

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Lankan conservation law and the framework for ethical science research (Commentary)". Mongabay Environmental News (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-08-25. பார்க்கப்பட்ட நாள் 2021-01-13.
  2. "Measures underway to prevent elephants from consuming polythene". Sri Lanka News - Newsfirst (in ஆங்கிலம்). 2020-11-30. பார்க்கப்பட்ட நாள் 2021-01-13.

புற இணைப்புகள்[தொகு]