வனப் பயிற்சிப் பணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வனப் பயிற்சிப் பணி (Forest Apprentice) என்பது தமிழ்நாடு அரசின் ஆளுமைக்குட்பட்ட வனப்பகுதிகளை பாதுகாக்கவும், வனவுயிரனங்களை பராமரிக்கும் பொறுப்பினை மேற்கொள்ளும் தமிழ்நாடு வனத்துறைப் பணியாகும்.

தேர்வு மற்றும் பயிற்சிகள்[தொகு]

  • வனப் பயிற்சிப் பணியில் சேரவிரும்பும் உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்[1] தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
    • இத்தேர்வில் பங்குபெற தேவையான கல்வித் தகுதிகளாவன-;
      • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் வனவியலில் இளநிலைப் பட்டமோ, இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், உள்ளிட்ட அறிவியல் பாடங்கள் ஏதாவது ஒன்றில் இளைநிலைப் பட்டமோ பெற்றிருக்க வேண்டும்.
    • வயது வரம்புகளாக- 18 வயது முதல் 30 வயது உள்ளவர்கள் தகுதி பெறுவர். ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற கைம்பெண்கள் ஆகியோருக்கு வயது வரம்பு 35 ஆகும். முன்னாள் ராணுவத்தினருக்கு குறைந்தபட்ச வயது 18, உச்சபட்ச வயது 37.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி". செய்தி. tamil.careerindia.com. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2018.
  2. "வேலை வேண்டுமா? - வனப் பயிற்சிப் பணி". கட்டுரை. இந்து தமிழ். 17 சூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனப்_பயிற்சிப்_பணி&oldid=3578221" இலிருந்து மீள்விக்கப்பட்டது