வந்தாறுமூலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வந்தாறுமூலை
City
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிசெ பிரிவுஏறாவூர் பற்று (செங்கலடி)
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)

வந்தாறுமூலை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு ஊர். இது மட்டக்களப்பு நகரிலிருந்து 17 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு கிழக்குப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

இப்பிரதேசத்திற்கு வந்தாறுமூலை என பெயர் வர வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் நிகழ்வே காரணம் என கூறப்படுகின்றது. அதாவது, கண்ணகி மதுரையை எரித்துவிட்டு உக்கிர கோபத்துடன் இலங்கை வந்த போது இப்பிரதேசத்தில் வந்து தன் கோபம் ஆற்றப் பெற்றதாகவும், அதனாலேயே இக் கிராமம் வந்தாறுமூலை (வந்து+ஆறிய+மூலை) எனப் பெயர் பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

இக்கிராமத்தில் மூன்று முக்கிய ஆலயங்கள் அமையப்பெற்றுள்ளன. அவை வந்தாறுமூலை கண்ணகி அம்மன் ஆலயம், வந்தாறுமூலை மகா விஷ்ணு ஆலயம் மற்றும் வந்தாறுமூலைச் சிவன் கோவில் என்பனவாகும்.

நீர்ப்பாசனக் குளங்கள்[தொகு]

வந்தாறுமூலையில் காணப்படும் நீர்ப்பாசனக் குளங்கள் பின்வருமாறு. அவற்றில் பல தூர்ந்து போன நிலையிலுள்ளன.

  1. குளத்து வெட்டைக் குளம்
  2. ஈரனைக்குளம்
  3. விற்பனை மடுக் குளம்
  4. சமுனையடிப் பொத்தனைக் குளம்
  5. சின்னத்துரைச் சோலையடிக் குளம்
  6. பெரியசின்னத்துரைச் சேனைக் குளம்
  7. அயண ஓடைக் குளம்
  8. இலுக்குப் பொத்தானைக் குளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வந்தாறுமூலை&oldid=2770492" இருந்து மீள்விக்கப்பட்டது