உள்ளடக்கத்துக்குச் செல்

வந்தன்பிராண்டைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வந்தன்பிராண்டைட்டு
Vandenbrandeite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுCu(UO2)(OH)4
இனங்காணல்
நிறம்நீல பச்சை நிறத்துடன் கரும்பச்சை முதல் அடர் பச்சை வரை
படிக அமைப்புமுச்சரிவச்சு
பிளப்புசரிபிளவு {001}, {110}
தெளிவு மற்றும் [001] மண்டலத்தில் தெளிவற்றது
முறிவுஇல்லை
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை4
மிளிர்வுபளபளக்கும், உயவுத்தன்மை
கீற்றுவண்ணம்பச்சை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்,ஒளி கசியும்
ஒப்படர்த்தி5.03
அடர்த்தி5.03
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.765 - 1.770 nβ = 1.780 - 1.792 nγ = 1.800
இரட்டை ஒளிவிலகல்0.035
பலதிசை வண்ணப்படிகமைபுலப்படும்
2V கோணம்அகவிடப்பட்டது 90°
கணக்கிடப்பட்டது 60°- 88°
நிறப்பிரிகைபுலப்படும்
புறவூதா ஒளிர்தல்இல்லை
பிற சிறப்பியல்புகள் கதிரியக்கம்

வந்தன்பிராண்டைட்டு (Vandenbrandeite) என்பது Cu(UO2)(OH)4என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பெல்சிய நாட்டுப் புவியியலாளர் பியர் வான் டென் பிராண்டே என்பவரின் பெயரால் இக்கனிமம் பெயரிடப்பட்டது. அவர் ஒரு தாதுப் படிவை கண்டுபிடித்தார். இது 1932 ஆம் ஆண்டில் பெயரிடப்பட்டது, அன்றிலிருந்து இது ஒரு செல்லுபடியாகும் கனிமமாக இருந்து வருகிறது.[1]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் வந்தன்பிராண்டைட்டு கனிமத்தை Vbd[2]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

பண்புகள்

[தொகு]

வந்தன்பிராண்டைட்டு கனிமம் அரை மில்லிமீட்டர் வரை நுண்படிகங்களில் வளரும். இது வட்டமானதாகவோ அல்லது மெல்லிய மரப்பட்டை போன்றதாகவோ இருக்கும். படிகங்கள் {001} அளவில் தட்டையானவை. இணையான திரட்டுகளில், மெல்லிய அடுக்குகளாக செதில் வடிவத்தில் வளர்கிறது.[3] இது தட்டையான வடிவத்தில் உள்ளது, அதாவது ஒரு திசையில் இதன் பரிமாணங்கள் பலவீனமாக உள்ளன.[4] இது ஒரு பல்வண்ணக் கனிமம். தாது காணப்படும் அச்சைப் பொறுத்து, ஒளியியல் நிகழ்வுக்கு உட்பட்டு இதன் நிறம் மாறுகிறது. எக்சு-அச்சில் நீல-பச்சை நிறமாகவும், ஒய்-அச்சில் மஞ்சள்-பச்சை நிறமாகவும் தோன்றும். நீர் மற்றும் ஐதரசன் பெராக்சைடு இரண்டின் முன்னிலையிலும் இக்கனிமம் மிகவும் நிலைத்தன்மை கொண்டது.[1] வந்தன்பிராண்டைட்டு அதிக கதிரியக்கத்தன்மை கொண்டதாக இருப்பதால், பொதுவாக மற்ற கதிரியக்க தாதுக்களுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுடிருக்கும்.[5] இதன் கதிரியக்க பண்புகளுக்கு கனிமத்தில் உள்ள அதன் கலவை காரணமாகும். கனிமத்தின் இயைபு 59.27% ​​யுரேனியத்தால் ஆனது. யுரேனியம் இந்தக் கனிமத்தின் முக்கிய அங்கமாகும். வந்தன்பிராண்டைட்டு 4,352,567.33 என்ற காமா கதிர் அமெரிக்க பெட்ரோலிய நிறுவன அலகுகள் அளவை கொண்டுள்ள இதன் செறிவு அளவு 229.75 ஆகும். ஆக்சிசன் (23.9%), தாமிரம் (15.82%) மற்றும் ஐதரசன் (1%) ஆகியவை வான்டன்பிரான்டைட்டில் உள்ள பிற வேதியியல் தனிமங்களாகும். கதிரியக்கமாக இருந்தாலும், இந்த கனிமம் ஒளிரும் தன்மை இல்லாமல் இரண்டாம் நிலை கனிமமாக அறியப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Vandenbrandeite". www.mindat.org. Retrieved 2021-09-24.
  2. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
  3. "Vandenbrandeite". National Gem Lab (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-03-27. Retrieved 2021-09-24.
  4. 4.0 4.1 "Vandenbrandeite Mineral Data". webmineral.com. Retrieved 2021-06-22.
  5. "Vandenbrandeite".
"https://ta.wikipedia.org/w/index.php?title=வந்தன்பிராண்டைட்டு&oldid=4408936" இலிருந்து மீள்விக்கப்பட்டது