உள்ளடக்கத்துக்குச் செல்

வண்ண வெளவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


வண்ண வெளவால்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
முதுகுநாணிகள்
வகுப்பு:
வரிசை:
கைச்சிறகிகள்
குடும்பம்:
வெஸ்பெர்டிலியோனைட்
பேரினம்:
கெரிவோலா
இனம்:
கே. பிக்டா
இருசொற் பெயரீடு
கெரிவோலா பிக்டா
பல்லாஸ், 1767
Species distribution (in southeast Asia) based on data from the பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kerivoula picta
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வண்ண வெளவால் (painted bat) ("Kerivoula picta) வெஸ்பெரிடிலியோனிடே குடும்பத்தை சார்ந்த மாலைநேர வௌவால் ஆகும்.

இந்த வகை வெளவால்கள் பங்களாதேஷ்,[2] புரூணை, பர்மா, கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இது வறண்ட வனப்பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது.

உடல் அமைப்பு

[தொகு]

இதன் உடல் மற்றும் வால் பகுதி ஒரே அளவில் இருக்கும். இதன் உடல் மற்றும் வால் பகுதியின் நீளம் 3 முதல் 5.5.செ.மீ. வரை காணப்படுகிறது. இறக்கையின் அளவு 18 முதல் 30செ.மீ. வரையிலும், இதன் நிறை தோராயமாக 5 கிராம் வரை இருக்கும். "கெரிவோலா பிக்டா" வகை வெளவால் அடர்ந்த ஆரஞ்சு நிறத்தில் உள்ளது. இதன் இறக்கைகள் கருப்பு நிறத்திலும், விரல்கள் ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும். பலவகையான வெளவால்களுக்கு இடையில் இவைகள் மிகவும் பலவீனமாகவும், சுருள் முடியுடனும், புனல் வடிவ காதுகளுடன் காணப்படுகின்றன. இதற்கு 38 பற்கள் உள்ளன. இதன் காதுகள் நீளமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் காணப்படுகிறது. வாய்பகுதி முடியுடன் காணப்படும். வயதான வெளவால்கள் பெண் வெளவால்களை விட நிறத்தில் சிறந்து காணப்படும்.

பண்புகள்

[தொகு]

இவ் வகை விலங்குகளின் ஒரு பகுதி, பழகிய மரப்பொந்துகள், வாழை மரத்தின் இலைகள், குடிசையின் மேற்பகுதியில் வாழும் தன்மை கொண்டது.[3] வண்ண வெளவால்கள் பெரும்பாலும் தன் இணையுடன் இருக்கும். இது பகற்பொழுதில் தலைகீழாக தொங்கிய நிலையில் மந்தமாகவே காணப்படும்.[2] பெரும்பாலும் இவை இரவில் உணவு உட்கொள்கின்றன."கெரிவோலா பிக்டா" பறக்கும் போதே இரையை பிடித்து உண்ணும். வெளவால்கள் இரவில் 1முதல் 2 மணி நேரம் வரை வேட்டையாடுகின்றன.[4]

எதிரொலி இடமாக்கம்

[தொகு]

இந்த இனங்கள் எங்கும் பரவியுள்ளதால் தான் ஏற்படுத்தும் ஒலி அலைகளின் மூலம் இடம் பெயர்ந்து வேட்டையாடுகிறது. மற்ற வகை வெளவால்கள் ஏற்படுத்தும் அதிர்வலைகள் "கெரிவோலா" இன வெளவால்கள் ஏற்படுத்தும் அதிர்வலைகளுக்கு ஒப்பீட்டளவில் ஒத்திருக்கிறது. இந்த எதிரொலிகளின் அதிகபட்ச வரம்பு 156.9கி.ஹெர்ட்ஸ் முதல் 41.5.கி.ஹெர்ட்ஸ் வரை இருக்கும். பறக்கும் போதும், நிலையாக மரத்தில் இருக்கும் போதும் இதன் அளவு மாறுபடுகிறது. அதிக அதிர்வெண்களைக் கொண்ட இழைகளை குறைந்த அதிர்வெண்களோடு ஒப்பிடுகையில் அதிக இரைச்சலுடன் வரும் வெளவால்கள் குறைந்த ஒலியுடன் வருபவற்றை விட இரையைப் பிடிப்பதில் சிறப்பாக இருக்கின்றன. இரையைப் பிடிப்பதில் இந்த எதிரொலியானது அதன் வாழ்விட சிதைவுக் கூளங்கள் அளவானது முக்கியமானதாகும்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hutson, A.M.; Francis, C.; Molur, S.; Srinivasulu, C. (2008). "Kerivoula picta". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008: e.T10985A3236076. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T10985A3236076.en. http://oldredlist.iucnredlist.org/details/10985/0. பார்த்த நாள்: 9 December 2017. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 http://oldredlist.iucnredlist.org/details/10985/0[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Zoo Print Magazine" இம் மூலத்தில் இருந்து 2017-09-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170909001932/http://www.zoosprint.org/ZooPrintMagazine/2017/August/30-32.pdf. 
  4. 4.0 4.1 Sripathi, K., H. Raghuram, and N. Thiruchenthil. "Echolocation Sounds of the Painted Bat Kerivoula Picta (Vespertilionidae)." Current Science 91.9 (2006): 1145-147. Print.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்ண_வெளவால்&oldid=3362171" இலிருந்து மீள்விக்கப்பட்டது