வண்டி உருட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளையம் உருட்டல்
வண்டி இழுத்தல்

வண்டி உருட்டுதல் சிறுவர்களின் பொழுதுபோக்கு விளையாட்டு. நடைவண்டி, இழுவண்டி, உருட்டு-வண்டி என இவற்றைப் பாகுபடுத்திக்கொள்ளலாம்.

கையில் கிடைக்கும் வளையங்களைக் கோலால் தட்டியும், கோலால் உந்தியும் உருளச் செய்து அதனுடன் ஓடுதல் சிறுவர்களின் பொழுதுபோக்கு விளையாட்டு

சங்ககாலம்
  • காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபயிலும் சின்னஞ்சிறு பிள்ளைகள் முக்கால் சிறுதேர் உருட்டி விளையாடிய உள்ளது.[1]
பிள்ளைத்தமிழ்
நடைவண்டி
நடைவண்டியை உருட்டிக்கொண்டு நடக்கச் செய்து குழந்தைகளுக்கு நடை பழக்குவர்
இழுவண்டி
தென்னைமட்டைகளையும் வாழைமட்டைகளையும் பயன்படுத்தி அதன்மேல் சிறுவர்களை அமரச்செய்து இழுத்துச்சென்று திளைப்பர்.
உருட்டுவண்டி
  • இரும்பு வளையங்களைக் கவைக்கோலால் தள்ளி உருட்டுவர்.
  • சைக்கிள் ரிம்களை குச்சி ஒன்றால் உந்தி உருட்டிச் சென்று மகிழ்வர்.
  • சைக்கிள் போன்றவற்றின் வண்டி டயர்களைக் கோலால் தட்டி உருட்டிச் சென்று மகிழ்வர்.

இவற்றையும் பார்க்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. பொற்கால் புதல்வர் புரவியின் உருட்டும் முக்கால் சிறுதேர் - பட்டினப்பாலை 24-25
  2. திண்டே ருருட்டவளர் செந்தில்வாழ் கந்தனே
    சிறுதேர் உருட்டி யருளே
    சேவற் பதாகைக் குமாரகம் பீரனே
    சிறுதேர் உருட்டி யருளே. - திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்

கருவிநூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்டி_உருட்டல்&oldid=1036906" இலிருந்து மீள்விக்கப்பட்டது