வண்டல் விசிறி
Jump to navigation
Jump to search
வண்டல் விசிறி அல்லது வண்டல் விசிறிக்குவியல் என்பது ஆற்று நீரோட்டத்தால் ஏற்படும் நில வடிவமைப்பாகும். ஆறு மலையில் இருந்து ஓடி வருகின்ற போது, வேகம் குறைந்து அது தன்னுடைய சுமையின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ படியச் செய்கிறது. மேலும், ஆற்றின் சுமை அதிகமாகும் போது படிதல் ஏற்படுகிறது. இவ்வாறு ஆற்றால் குவிக்கப்பட்ட பொருள்களை வண்டல் மண் என்கிறோம்.
மலையிலிருந்து ஆறு சம நிலத்தில் இறங்கி ஓடும்போது அதனுடைய வேகம் திடீரென்று குறைந்து, கடத்திக் கொண்டு வரப்பட்ட வண்டல் மலையடிச் சாிவில் படிகிறது. இந்தப் படிவு விசிறி வடிவம் உடையதாக இருப்பதால் இதனை வண்டல் மண் விசிறி என்பா்.
மேற்கோள்கள்[தொகு]
1. Ahamed,E.(1982), Physical Geography, Kalyani Publishers, New Delhi
2. மேல்நிலை - முதலாம் ஆண்டு - புவியியல், தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6.