உள்ளடக்கத்துக்குச் செல்

வணிக முத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணிக முத்திரை (Trade Mark) என்பது வரைபட அடிப்படையில் முதன்மைப்படுத்தும் மற்றும் பொருளை வேறுபடுத்திக் காட்டும் ஒரு குறியீடாகும். அதாவது, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் அல்லது சேவைகளைச் சந்தையில் உள்ள மற்றவர்களின் உற்பத்திகளிலிருந்து வேறுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு தனித்துவமான குறியீடாக ‘வணிக முத்திரை’ இருக்கிறது. உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, அதே போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் பிற உற்பத்தியாளர்களின் பொருட்களிலிருந்து பிரித்துக் காண்பிக்க வணிக முத்திரை உதவுகிறது.

1999 ஆம் ஆண்டின் வணிக முத்திரைச் சட்டம், வணிக முத்திரைகள் பதிவு செய்வது குறித்து விளக்குகிறது. மேலும், இச்சட்டம் வணிக முத்திரை மற்றும் அவற்றுடன் தொடர்புடைய உரிமைகளுக்குச் சட்டப்பூர்வப் பாதுகாப்பை வழங்குகிறது. வணிக முத்திரையை மற்றவர்கள் நகலெடுப்பதைத் தடுக்கவும், ஒரு நிறுவனம் அல்லது அமைப்பின் சேவைகளை இழிவுபடுத்த அதைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் வணிக முத்திரைகள் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது.  

"https://ta.wikipedia.org/w/index.php?title=வணிக_முத்திரை&oldid=4319993" இலிருந்து மீள்விக்கப்பட்டது