வணிக ஆவணம்
வணிக ஆவணம் (Commercial Paper) என்பது உறுதிச்சீட்டு வடிவில் அளிக்கப்படும் ஈடுபெறாத பணச்சந்தை முறை ஆவணம் ஆகும்.[1] பெருமளவில் கடனுதவி பெறும் கூட்டு நிறுவன வணிகர்களுக்குக் குறுகிய காலக் கடன்பெறும் வாய்ப்புகளைப் பல்வகைப்படுத்தல், முதலீட்டாளர்களுக்கு ஒரு கூடுதல் செயற்கருவியை அளித்தல் ஆகிய நோக்கங்களுக்காக இது அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி முதன்மை வணிகர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த வணிகர்கள் வணிகச் செயல்பாட்டுக்கு ஏதுவாக குறுகிய காலக்கடன் தேவைகளைச் சரிக்கட்டும் பொருட்டு வணிக ஆவணம் வழங்கிடும் அனுமதி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. ஒன்றிணைந்த நிறுவனங்கள், முதன்மை வணிகர்கள் மற்றும் அகில இந்திய நிதியுதவி நிறுவனங்கள் வணிக ஆவணம் வழங்கலாம்.[1]
நிபந்தனைகள்
[தொகு]கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டே வணிக ஆவணம் வழங்க முடியும்:
- கடைசியாகத் தணிக்கை செய்யப்பட்டு வெளியான, குழுமத்தின் ஐந்தொகை ஏட்டில் குழுமத்தின்
திட்பமான நிகர மதிப்பு நான்கு கோடிக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
- வங்கிகள்/அகில இந்திய நிதி நிறுவனங்கள் கம்பெனிக்கு செயல் மூலதனம் அளித்திருக்க வேண்டும்.
- நிதியுதவி செய்யும் வங்கிகள்/நிறுவனங்கள் குழுமங்களின் கடன் கணக்கை தகுநிலைச் சொத்து என வகைப்படுத்தியிருக்க வேண்டும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "வணிக ஆவணம்". இன்வெஸ்டாபீடியா. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2013.