உள்ளடக்கத்துக்குச் செல்

வணிகத் தெரு, பெங்களூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2012 ரமலான் நாளில் வணிகத் தெரு

வணிகத் தெரு (Commercial Street) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூர் நகரிலுள்ள ஒரு பரபரப்பான வணிக வீதியாகும். பெங்களூர் நகரின் மையத்தில் இருக்கும் தொன்மையான பகுதிகளில் ஒன்றாகவும் பரபரப்பான வணிகப் பகுதியாகவும் இத்தெரு கருதப்படுகிறது.[1][2] உடைகள், காலணிகள், நகைகள், மின்னணுவியல் பொருள்கள் விற்பனைக்கு இப்பகுதி பிரபலமானதாகும். உணவு விடுதிகள் பலவும் இங்கு காணப்படுகின்றன.[3][4] நான்கு சக்கர வாகனங்களுக்கு தெருவில் 75 நிறுத்துமிடங்கள்[5] மட்டுமே உள்ளதால் இத்தெரு நகரத்தில் மிகவும் நெரிசலான ஒன்றாக இயங்குகிறது.

வணிகத் தெரு பெங்களூரு நகரின் மையத்தில் மத்திய வணிக மாவட்ட பகுதியில் மற்றொரு பிரபலமான வணிகப்பகுதியான எம் ஜி சாலைக்கு அருகிலும் மற்றும் சிவாஜி நகரிலுள்ள ரசல் சந்தைக்கு அருகிலும் அமைந்துள்ளது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Das, Bhavani. "No public toilets even on the busiest streets in Bangalore". DNA India. Retrieved 31 December 2015.
  2. Sarma, Deepti. "One-stop street for the shopaholic in you". Citizen Matters. Retrieved 31 December 2015.
  3. Krishna Kumar, Shyama. "One-hour Stitching Now the Rage". The New Indian Express. Retrieved 31 December 2015.
  4. "Top ten street shopping places in India". ABP Live. Archived from the original on 18 டிசம்பர் 2015. Retrieved 31 December 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Khan, Laiqh A.; Srivatsa, Sharath S. "The elusive parking spot in Commercial Street area". The Hindu. Retrieved 31 December 2015.
  6. "Commercial Street Of Bangalore". bangalore.ind.in. Retrieved 31 December 2015.

படக்காட்சியகம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வணிகத்_தெரு,_பெங்களூர்&oldid=3750147" இலிருந்து மீள்விக்கப்பட்டது