வணிகத்தின் உட்பிரிவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணிகத்தின் உட்பிரிவுகள் என்பது உற்பத்தி பொருட்களை அல்லது சேவைகளை தயாரிப்பாளரிடமிருந்து நுகர்வோருக்கு பரிமாற்றம் செடீநுயும் பணியில் அமையும் நடவடிக்கைகள் அனைத்தையுமே வணிகம் என்ற சொல்லின் உள்ளடக்கலாம். மேற்கண்ட பரிமாற்றத்தில் பல தடைகள் குறுக்கிடுகின்றன. உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் இடையே தங்கு தடையற்ற வணிக பரிமாற்றம் நிகடிநவதே வணிகத்தின் குறிக்கோளாகும். வியாபாரம், போக்குவரத்து, நிதி, பண்டகம், காப்பீடு, விளம்பரம் முதலானவற்றுள் அவ்வப்பொழுது சில தடைகள் தோன்றக் கூடும். இருப்பினும், இவற்றோடு தொடர்புள்ள சில வணிக நடவடிக்கைகள் தடைகளை நீக்கப் பேருதவியாக இருக்கின்றன. வணிகமும் அதன் கிளைகளும்

வியாபாரம்[தொகு]

மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் மற்றும் வணிக முகவர்களின் உதவியுடன் வியாபாரம் ஆள்சார் தடையை நீக்குகிறது. பொருட்களின் உரிமையும், உடைமையும் உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோரை சென்று அடைவது கட்டாயமாகும். அப்போது தான் நுகர்வோர் இத்தகு பொருட்களை நுகர முடியும். இந்த பணிகளை வியாபார நிறுவனர்களே சரியாக செடீநுது முடிக்க இயலும். உற்பத்தியாளர்களிடமிருந்து மொத்த வியாபாரிகள் பொருட்களைப் பெறுகின்றனர். மொத்த வியாபாரிகளிடமிருந்து சில்லறை வியாபாரிகள் அந்த பொருட்களை பெறுகின்றனர். நுகர்வோர் தத்தம் தேவைகளுக்கேற்ப பொருட்களைச் சில்லறை வியாபாரிகளிடமிருந்து வாங்கிக் கொள்கின்றனர். இவ்வாறு ஆள்சார்தடை நீக்கப்படுகிறது.

போக்குவரத்து[தொகு]

போக்குவரத்து இடத்தடைகளை நீக்குகிறது. பொருட்களின் தேவை குறைவாக உள்ள இடத்திலும், அதிக பொருட்கள் உற்பத்தி செடீநுயப்படலாம். எனவே உபரி பொருட்கள் போக்குவரத்து சாதனங்களின் உதவியோடு தேவை உள்ள இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதன் மூலம் அப்பொருட்களுக்கு நாம் இடப்பயன்பாட்டை உருவாக்குகிறோம். இடபயன்பாட்டு முறையால் உற்பத்தியாளர் உற்பத்தியை அதிகப்படுத்தி தன் வருவாயை பெருக்கிக் கொள்கிறார். இத்தகு உற்பத்திப் பொருட்களின் சரியான விநியோகத்தால் நுகர்வோர் தேவை நிறைவேறுகிறது. சாலை, இரயில், கடல், வான் போன்ற பல்வேறு வகையான போக்குவரத்து சாதனங்கள் வாணிகம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன. அதே சமயம் பொருட்களின் தேவையை பொறுத்து ஒரு உற்பத்தியாளர் எந்த அளவு வேண்டுமானாலும் உற்பத்தி செடீநுயவும் இயலும்.

பண்டகக்காப்பகம்[தொகு]

காலத்தடையை பண்டகக்காப்பகம் நீக்கிவிடும். பருத்தி, சணல், உணவு தானியங்கள், சர்க்கரை முதலான பொருட்களின் உற்பத்தி சில குறிப்பிட்ட பருவகாலங்களில் தான் செடீநுயப்படுகின்றன. ஆனால், அவற்றின் தேவை ஆண்டு முழுவதும் இருக்கும். ஆண்டு முழுவதும் இப்பொருட்கள் தடையின்றி கிடைக்கப் பண்டகக்காப்பகம் தேவைப்படுகிறது. சில பொருட்கள் சில குறிப்பிட்ட பருவக்காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. கம்பளித் துணிகள் பனிக்காலத்திலும், மழை அங்கி மற்றும் குடைகள் மழைக்காலத்தில் பயன்படுத்தும் பொருட்கள் ஆகும். இத்தகு பொருட்கள் அந்தப் பருவகாலங்கள் வருவதற்கு முன்னதாகவே தேவைக்கு அதிகமாகவே தயாராக இருப்பு வைத்துக் கொள்ள வேண்டியது இன்றியமையா பணியாகும். இத்தகு நடைமுறைப் பணிகள் பண்டகக் காப்பகத்தின் உதவியோடு தான் நிறைவேற்றப்படுகின்றன.

வங்கிப் பணிகள்[தொகு]

நிதிப் பற்றாக்குறை எப்பொழுதும் உருவாகக் கூடிய ஒன்றுதான். எப்பொழுதும் பொருட்களின் உற்பத்திக்கும், நுகர்வுக்கும் இடையே மிகுதியாக காலஇடைவெளி ஏற்படுவது இயல்பே. இத்தகு பொருட்கள் நுகர்வோரிடம் விற்ற பிறகே அத்தகு பொருட்களுக்குரிய பணம் கிடைக்கக்கூடும். இக்கால இடைவேளையில் வணிகத்தை தொடர்ந்து நடத்த வணிகர்களுக்கு நிதி தேவைப்படுகிறது. இந்நிதித் தேவைகளை பற்பல வணிக வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பூர்த்தி செடீநுது வருகின்றன.

விளம்பரமும் விற்பான்மையும்[தொகு]

நுகர்வோர் சந்தையில் கிடைக்கும் பல்வகைப்பட்ட பொருட்களைப் பற்றிய எல்லா விபரங்களையும் அறிந்து வைத்திருப்போர் எனக் கூற இயலாது. நுகர்வோரின் வாங்கும் திறன் வளராமல் தடுக்கும் நிலையைப் பெரிதும் வளர்ப்பது அப்பொருட்களைப் பற்றிய செடீநுதிகளை அறிய இயலாதிருப்பதே ஆகும். உற்பத்தியாளரும் பெருமளவு நுகர்வோரை அடைவதையே விரும்புவார். இதற்கு விளம்பரமும், விற்பான்மையும் பெரிதும் உதவி செடீநுகின்றன. நுகர்வோர்க்குப் பொருட்கள் தொடர்பான எல்லாச் செடீநுதிகளையும், அவற்றின் சிறப்புகளையும், கிடைக்கும் இடங்களையும், பயன்படுத்தும் முறைகளையும் தொலைகாட்சி, வானொலியின் பண்பலை ஒலிபரப்பு, இணையம் போன்ற சாதனங்கள் மூலம் தொடர்ந்து விளம்பரம் செடீநுது நுகர்வோர்க்கிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகின்றன.

காப்பீடு[தொகு]

ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு போக்குவரத்து சாதனங்கள் மூலம் பொருட்களைக் கொண்டு செல்லும் போது தீப்பிடித்தல் மற்றும் திருட்டு போன்றவற்றால் இடர்பாடுகள் ஏற்பட வாடீநுப்புண்டு. இந்த இழப்புகளால் வியாபார வளர்ச்சியில் பல தடைகள் ஏற்படக் கூடும். இவ்வகை இடர்பாட்டினை காப்பீட்டு நிறுவனங்களிடம் காப்பீ¬டு செடீநுவதன் மூலம் மட்டுப்படுத்திக் கொள்ள முடிகிறது. இத்தகு காப்பீட்டுத் திட்டங்களால் தேசிய வணிகம் மட்டுமன்று, உலக வணிகமும் பற்பல நன்மைகளைப் பெற்றுத் தம்மைக் காத்துக் கொள்ள இயலும்.

தகவல் தொடர்பு[தொகு]

விற்போரும், வாங்குவோரும் மொத்த வியாபார நிலையிலும், சில்லறை வியாபார நிலையிலும் தத்தம் வணிகச் செடீநுதிகளைத் தம்முள் பரிமாறிக் கொள்ள யாதேனும் சில சாதனங்களை எதிர்பார்த்திருக்க வேண்டியுள்ளது. உற்பத்தியாளர் தத்தம் உற்பத்திப் பொருட்களைப் பற்றி நுகர்வோருக்கு அவ்வப்பொழுது தெரிவித்து வர வேண்டியுள்ளது. வாங்குவோர் தாம் விரும்பும் பொருட்களைப் பெற்றுக் கொள்ள விற்போருக்கு உரிய முறையில் தெரிவிக்க வேண்டியுள்ளது. அஞ்சல் நிலையம், தனியார் கூரியர் சர்வீஸ், ஃபேக்ஸ், தொலைபேசி, செல்போன் போன்றவை இத்தகு செடீநுதிப் பரிமாற்றங்களுக்குப் பெரிதும் உதவி வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]