வணரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

[1] ஓர் எந்திர இணைப்பிலோ இயங்கமைப்பிலோ ஒரு சுழற்சி மையத்தைத் திருப்பும் ஓர் இணைப்பு வணரி எனப்படும். வணரி கண்ணிகளின் வகையினைச் சார்ந்தது. உருளை ஒன்றுடன் வணரி இணைக்கப்பட்டிருக்கும். இவ்வுருளைக்கு வணரி உருளை அல்லது வளை உருளை என்று பெயர். வணரியின் சுற்று வட்ட மையம் வளை உருளையின் இயக்க மையத்தில் இருக்கும். மேலும் இவ்வியக்க மையம் வணரியை அதன் அருகே அமையும் கண்ணியுடன் இணைக்கவும் உதவுகிறது. வணரி அதன் சுற்றுவட்ட மையத்தைப் பொறுத்துச் சுழலுமாறு அமைக்கப்படுகிறது. இந்தச் சுழற்சி ஒரு முழுச் சுற்று ஆகவும் இருக்கும். அதே போலச் சுற்றுவட்ட மையத்தைப் பொறுத்து ஊசலாடுமாறும் பெரும்பாலும் அமைக்கப்படும். அலைவுறும் வகையிலோ அதன் சுற்றுவட்ட எல்லைக்கு இடைப்பட்ட அளவுகளில் திரும்பும் வகையிலும் உள்ளன.பக்கம் எண் 411.

  1. அறிவியல் களஞ்சியம் - தொகுதி - 18 - தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு எண்:344 நவம்பர் - 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=வணரி&oldid=2723839" இருந்து மீள்விக்கப்பட்டது