உள்ளடக்கத்துக்குச் செல்

விண்முனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வட விண்முனை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வட, தென் விண்முனைகளையும், அவற்றுக்கும், சுழற்சி அச்சு, சுற்றுப்பாதைத் தளம், அச்சுச் சாய்வு என்பவற்றுக்கும் இடையிலான தொடர்புகளையும் காட்டும் படம்.

விண்முனைஎன்பது, வட விண்முனை அல்லது தென் விண்முனையைக் குறிக்கும். புவியின் சுழற்சி அச்சை முடிவில்லாமல் நீட்டும்போது, விண்கோளம் எனப்படும் கற்பனையான சுழலும் விண்மீன்களைக் கொண்ட கோளத்தை அது வெட்டும் இரண்டு புள்ளிகளே இவ்விரு விண்முனைகளும் ஆகும். வடமுனையிலும் தென் முனையிலும் நின்று பார்ப்பவர்களின் தலைக்கு நேர் மேலாக முறையே வட விண்முனையும், தென் விண்முனையும் இருக்கும்.

இரவில், வானில் தெரியும் விண்மீன்கள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்வதாகத் தோற்றம் அளிக்கும். இதே இயக்கம் பகலிலும் நிகழ்ந்தாலும், விண்மீன்களைப் பகலில் பார்க்க முடிவதில்லை ஆதலால் இந்த இயக்கத்தைக் கவனிக்க முடிவதில்லை. இந்த இயக்கம் முழுச்சுற்றைச் சுற்றி முடிப்பதற்கு 24 சூரிய மணிகள் எடுக்கும். விண்மீன்கள் சுழல்வது போல் தோன்றும் இந்தத் தோற்றப்பாடு புவி அதன் அச்சில் சுழல்வதினால் ஏற்படுவது ஆகும். புவி சுழலும்போது, விண்முனைகள் நிலையாக இருப்பதாகவும், விண்ணில் உள்ள ஏனைய புள்ளிகள் அவற்றைச் சுற்றி சுற்றுவது போலவும் தோன்றும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்முனை&oldid=3636977" இலிருந்து மீள்விக்கப்பட்டது