உள்ளடக்கத்துக்குச் செல்

வட கொரியா அணு ஆயுதச் சோதனை 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
M 6.3 வெடிப்பு - வடகொரியாவின் சஞ்சிபேகத்திலிருந்து 22 கி.மீ கிவகி-ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறையால் வெளியிடப்பட்ட சோதனையின் போதான நிலநடுக்கத்தைக் குறிக்கும் வரைபடம்

வட கொரியா தனது ஆறாவது அணு ஆயுதச் சோதனையை 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நடத்தியது. சப்பான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகமும் வட கொரியாவில் அணு ஆயுதச் சோதனை நிகழ்ந்திருப்பதை உறுதிப்படுத்தியது.[1] ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை (USGS) வட கொரியாவின் கில்ஜு தேசத்தில் உள்ள வட ஆம்க்யாக் மாகாணத்தில் உள்ள புங்க்யே-ரி அணு ஆயுதப் பரிசோதனை மையத்திற்கு மிக அருகாமையில் 6.3 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதைக் கண்டறிந்தது.[2] தென் கொரிய அதிகாரிகள் மட்டத்தில் நில நடுக்கமானது செயற்கையாக உருவாக்கப்பட்டது போன்றும், அணு ஆயுதச் சோதனை நிகழந்திருப்பதையொத்த நிகழ்வாக தோற்றமளிப்பதாகவும் அறிக்கை வெளியிட்டனர்.[1] இதே போன்று, சீனாவும் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்திருப்பதாகவும் தெரிவித்தனர். பல நிமிட நேரங்களுக்குப் பிறகு, மிகப்பெரிய குழிவு ஏற்படுவதை வைத்தும் அணு ஆயுதச் சோதனை நிகழ்த்தியிருப்பது உண்மை என அறியப்படுகிறது.[3][4]

வரலாறு

[தொகு]
2017 செப்டம்பர் 3ஆம் நாள் அணு ஆயுதச் சோதனை நிகழ்த்துவதற்கு கிம் சாங்-உன் ஒப்பமிட்டு வெளியிட்ட உத்தரவு

வட கொரியா தாங்கள் வெடித்துப் பார்த்தது ஒரு மிகப்பெரும் அழிவு சக்தி கொண்ட ஐதரசன் குண்டு எனவும், இத்தகைய ஐதரசன் குண்டினை கண்டம் விட்டுக் கண்டம் தாண்டும் ஏவுகணையில் (ICBM) நிரப்பி அனுப்ப இயலும் எனவும் கூறியுள்ளது.[5] வட கொரியா தனது அறிவிப்பில், போர்க்களங்களில் இதன் விளைவானது இன்னும் வேறுபட்ட நிலையில் இருக்கலாம் எனவும், இதன் வெடிக்கும் திறன் பத்து கிலோடன் முதல் 100 கிலோ டன் வரை மாற்றியமைக்கப்பட இயலும் எனவும், இன்னும் அதிக உயரங்களில் கூட மிக அதிக சக்தி வாய்ந்த தாக்குதல்களுக்காக (அணுக்கரு மின்காந்தத் துடிப்பு) இக்குண்டினைப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.[6] பின்பு வெளியிடப்பட்ட ஒரு தொழில்நுட்பவியல் அறிவிப்பு, இந்த சாதனத்தை "இரு கட்ட வெப்ப-அணுவாயுதம்" என்று அழைத்தது. மேலும் சோதனை அளவீட்டுகள் வடிவமைப்பு விவரக்குறிப்புடன் முற்றிலும் இணக்கமாக இருந்தன என்றும் சோதனைத் தளத்தில் கதிரியக்க பொருட்கள் எதுவும் கசிந்திருக்கவில்லை என்றும் கூறியுள்ளது.[7][8]

வட கொரியத் தலைவர் கிம் சாங்-உன் போர்க்கள பயன்பாட்டிற்கான வெப்ப அணு ஆயுதத்தை ஒத்த ஒரு சாதனத்தை ஆய்விடுவதைப் போன்று தோற்றமளிக்கும் ஒரு ஒளிப்படமானது பிரித்தானிய ஒலிபரப்பு நிறுவனத்தால் (பிபிசி) அணு ஆயுதச் சோதனை நிகழ்த்தப்பட்ட நாளான செப்டம்பர் 3 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ளது. [9]

விளைவு மதிப்பீடு

[தொகு]

தென் கொரிய பாராளுமன்றத்தின் பாதுகாப்புக்குழு தலைவரான கிம் யங்-ஊ வட கொரியாவினால் நடத்தப்பட்ட அணு ஆயுதச் சோதனையின் விளைவு மதிப்பானது அல்லது 100 கிலோடன்கள் டிரைநைட்ரோடொலுவீன் வெடிபொருளுக்குச் சமானமானது என்கிறார்.[10] செப்டம்பர் 3 ஆம் தேதி, தென் கொரியாவின் காலநிலை முகமையான கொரிய வானிலை ஆய்வு நிருவாகமானது அணு ஆயுத வெடிப்பின் விளைவு மதிப்பானது, 50 முதல் 60 கிலோடன்கள் வரை இருக்கும் என்று அனுமானிக்கப்பட்டது.[11] மாறாக, சுயேச்சையான நிலநடுக்க கண்காணிப்பு முகமையான NORSAR இந்த வெடிப்பின் விளைவு மதிப்பானது 120 கிலோடன்களாக இருக்கும் என்று நிலநடுக்க எண் மதிப்பான 5.8 இலிருந்து மதிப்பிட்டுள்ளது. .[12] செருமனியில் உள்ள புவிஅறிவியல் மற்றும் இயற்கை வளங்களுக்கான ஃபெடரல் நிறுவனமானது, 6.1 என்ற எண் மதிப்பிலிருந்து இன்னும் உயர்ந்த சில நுாறு கிலோ டன்கள் என்ற மதிப்பீட்டினை வருவித்துள்ளது.[13]

சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் [14] அணு ஆயுதச் சோதனை நிகழ்த்தப்பட்ட இடத்தை 41°17′53.52″N 129°4′27.12″E / 41.2982000°N 129.0742000°E / 41.2982000; 129.0742000 எனவும், நடந்த ரேம் 03:30 UTC எனவும், நிகழ்வு நடந்த இடமானது முந்தைய நான்கு சோதனைகள் (2009, 2013, சனவரி 2016 மற்றும் செப்டம்பர் 2016) நிகழ்த்தப்பட்ட இடத்திற்கு சில நுாறு மீட்டர்கள் துாரத்தில் தான் உள்ளது எனவும், விளைவிக்கப்பட்ட வெடிப்பு மதிப்பானது 108.1 ± 48.1 கிலோ டன்கள் எனவும் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "North Korea conducts another nuclear test, neighbors say". The Washington Post. 3 செப்டம்பர் 2017. https://www.washingtonpost.com/world/north-korea-apparently-conducts-another-nuclear-test-south-korea-says/2017/09/03/7bce3ff6-905b-11e7-8df5-c2e5cf46c1e2_story.html?utm_term=.a7850bfcc1ec. பார்த்த நாள்: 3 செப்டம்பர் 2017. 
  2. "North Korea confirms sixth nuclear test". CNN. 3 செப்டம்பர் 2017. http://www.cnn.com/2017/09/03/asia/north-korea-nuclear-test/index.html. பார்த்த நாள்: 3 செப்டம்பர் 2017. 
  3. "North Korea claims successful hydrogen bomb test". Deutsche Welle. 3 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 3 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. "North Korea nuclear test: 'Tunnel collapse' may provide clues". BBC News. 3 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 3 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. "North Korea says it successfully tested hydrogen bomb, marking sixth nuclear test since 2006". ABC News. 3 September 2017. http://www.abc.net.au/news/2017-09-03/north-korea-says-it-successfully-tested-hydrogen-bomb/8867568. பார்த்த நாள்: 3 September 2017. 
  6. "Sixth Nuclear Test Detected at Punggye-ri, Declared to be a Hydrogen Bomb". 38 North (U.S.-Korea Institute, Johns Hopkins University School of Advanced International Studies). 3 September 2017. http://www.38north.org/2017/09/nuke090317/. பார்த்த நாள்: 5 September 2017. 
  7. Ankit Panda, Vipin Narang (5 September 2017). "Welcome to the H-Bomb Club, North Korea". The Diplomat. https://thediplomat.com/2017/09/welcome-to-the-h-bomb-club-north-korea/. பார்த்த நாள்: 5 September 2017. 
  8. Kemp, Ted (3 September 2017). "North Korea hydrogen bomb: Read the full announcement from Pyongyang". CNBC News. https://www.cnbc.com/2017/09/03/north-korea-hydrogen-bomb-read-the-full-announcement-from-pyongyang.html. பார்த்த நாள்: 5 September 2017. 
  9. "Kim inspects 'nuclear warhead': A picture decoded". BBC News. 3 September 2017. http://www.bbc.co.uk/news/world-asia-41139741. பார்த்த நாள்: 3 September 2017. 
  10. Lawmaker (06 September 2017). "N. Korea's apparent sixth nuke test estimated to have yield of 100 kilotons: lawmaker". Yonhap News Agency. பார்க்கப்பட்ட நாள் 6 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  11. "North Korea nuclear test: what we know so far". Guardian. 3 September 2017. https://www.theguardian.com/world/2017/sep/03/north-korea-nuclear-test-what-we-know-so-far. 
  12. "Large nuclear test in North Korea on 3 September 2017". NORSAR. 3 September 2017. Archived from the original on 4 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 3 September 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. "BGR registers a presumed nuclear test in North Korea". Germany BGR. 3 September 2017. பார்க்கப்பட்ட நாள் 3 September 2017.
  14. "North Korea's 3 September 2017 Nuclear Test Location and Yield: Seismic Results from USTC". Lianxing Wen's Geography. University of Science and Technology of China. Archived from the original on 4 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 4 September 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)