உள்ளடக்கத்துக்குச் செல்

வட கிரிப்பியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வட கிரிப்பியன்
0.0082 – 0.0042 Ma
காலக்கோடு
11000 
10000 
9000 
8000 
7000 
6000 
5000 
4000 
3000 
2000 
1000 
0 
1000 
2000 
Quaternary
 
 
 
2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, ICS-இன் படி ஓலோசீனின் உட்பிரிவு.[1]
குத்து அச்சு: கிரிகோரியன் ஆண்டுகள்
முன்னையது[[]]
பின்னையது[[]]
சொற்பிறப்பு
Name formalityமுறைசார்ந்தது
Name ratified14 சூன் 2018[2]
தகவல்கள்
Celestial bodyபூமி
Regional usageஉலகளாவியது (ICS)
Time scale(s) usedICS Time Scale
வரைவிலக்கணம்
காலவரிசை அலகுகாலம்
பாறைஅடுக்கியல் அலகுநிலை
Time span formalityமுறைசார்ந்தது
Lower boundary definition8.2 ஆயிரமாண்டு நிகழ்வு
Lower boundary GSSPNGRIP1 ice core, Greenland
75°06′00″N 42°19′12″W / 75.1000°N 42.3200°W / 75.1000; -42.3200
Lower GSSP ratified14 சூன்2018[2]
Upper boundary definition4.2 ஆயிரமாண்டு நிகழ்வு
Upper boundary GSSPமௌலூ குகை, மேகாலயா, இந்தியா
25°15′44″N 91°42′54″E / 25.2622°N 91.7150°E / 25.2622; 91.7150
Upper GSSP ratified14 சூன் 2018[2]

புவியியல் கால அளவுகோலில், வட கிரிப்பியன் என்பது ஓலோசீன் பெருங்காலம் அல்லது சிற்றூழியின் மூன்று காலங்கள் அல்லது நிலைகளில் நடுவில் உள்ளது. இது சூன் 2018 இல், முந்தைய கிரீன்லாந்தியன் மற்றும் பிந்தைய மேகாலயன் காலங்கள்/நிலைகளுடன் சேர்ந்து, அனைத்துலக அடுக்குப்பாறை ஆணையத்தால் நிறுவன ஏற்பு அளிக்கப்பட்டது. இந்தப் புவியக் காலத்தின் பெயர், வடக்கு கிரீன்லாந்து பனிக்கோர் திட்டத்திலிருந்து (NorthGRIP) பெறுகிறது. இந்தக் காலம் 8,276 BP (6326 BCE அல்லது 3854 HE) இல், 8.2-கிலோ ஆண்டு நிகழ்வுக்கு அருகில் தொடங்கி, 4,200 BP (2251 BCE அல்லது 7750 HE) இல், 4.2-கிலோ ஆண்டு நிகழ்வுக்கு அருகில் தொடங்கிய மேகாலயனின் தொடக்கம் வரை நீடிக்கிறது.[1][3]

புவிய அடுக்கு வகை

[தொகு]

வட கிரிப்பியனின் அடிப்பகுதியை வரையறுக்கும் குளோபல் பவுண்டரி அடுக்குவகை செக்குசன் அண்டு பாயிண்டு (GSSP) (Global Boundary Stratotype Section and Point) என்பது, நடு கிரீன்லாந்திற்கு அருகிலுள்ள 75°06′N, 42°19′W என்ற ஆயக்கூறுகளில் அமைந்துள்ள ஒரு துளையிடும் தளத்திலிருந்து வடக்கு கிரீன்லாந்து பனிக்கோர் திட்டத்தால் (NorthGRIP அல்லது NGRIP) சேகரிக்கப்பட்ட ஒரு பனிக்கோர் ஆகும். NGRIP1 என்ற துளையிடும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட GSSP, 8.2 கிலோ ஆண்டு நிகழ்வின் போது பதிவுசெய்யப்பட்ட ஒரு முறை வெப்பநிலை வீழ்ச்சியைக் குறிக்கிறது.[3][4]

காலநிலை

[தொகு]

8.2-கிலோ ஆண்டு நிகழ்வுடன் தொடர்புடைய வெப்பநிலைச் சரிவுக்குப் பிறகு, காலநிலை மீண்டும் வெப்பமடைந்து, ஓலோசீன் பெருங்காலத்தில் பதிவுசெய்யப்பட்ட மிக உயர்ந்த வெப்பநிலையை எட்டியது. இக்காலகட்டத்தில் சில சிறிய ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், வட கிரிப்பியனின் முதல் பகுதி ஓலோசீன் காலநிலை உகந்தநிலையுடன் ஒத்துப்போனது. கி.மு. 2250-ஆம் ஆண்டளவில், 4.2-கிலோ ஆண்டு நிகழ்வானது மேலும் ஒரு தற்காலிக வெப்பநிலைச் சரிவுடன் சேர்ந்து, வட கிரிப்பியனின் முடிவையும் மேகாலய காலத்தின் தொடக்கத்தையும் குறித்தது.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. 1 2 "International Chronostratigraphic Chart" (PDF). பன்னாட்டு அடுக்குப்படிவவியல் ஆணையம். December 2024. Retrieved October 23, 2025. பிழை காட்டு: Invalid <ref> tag; name "ICS" defined multiple times with different content.
  2. 1 2 3 Walker, Mike; Head, Martin J.; Berkelhammer, Max; Björck, Svante; Cheng, Hai; Cwynar, Les; Fisher, David; Gkinis, Vasilios et al. (1 December 2018). "Formal ratification of the subdivision of the Holocene Series/ Epoch (Quaternary System/Period): two new Global Boundary Stratotype Sections and Points (GSSPs) and three new stages/subseries". Episodes (Subcommission on Quaternary Stratigraphy (SQS)) 41 (4): 213–223. doi:10.18814/epiiugs/2018/018016. https://stratigraphy.org/gssps/files/meghalayan.pdf. பார்த்த நாள்: 28 August 2020. This proposal on behalf of the SQS has been approved by the International Commission on Stratigraphy (ICS) and formally ratified by the Executive Committee of the International Union of Geological Sciences (IUGS).
  3. 1 2 "Global Boundary Stratotype Section and Points". International Commission on Stratigraphy. Retrieved 25 September 2025.
  4. Head, Martin J. (17 May 2019). "Formal subdivision of the Quaternary System/Period: Present status and future directions". Quaternary International 500: 32–51. doi:10.1016/j.quaint.2019.05.018. Bibcode: 2019QuInt.500...32H. https://www.sciencedirect.com/science/article/pii/S1040618219304343.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_கிரிப்பியன்&oldid=4617226" இலிருந்து மீள்விக்கப்பட்டது