வட்டு சேமிப்பு
வட்டு சேமிப்பு (ஆங்கிலத்தில் Disk storage) என்பது தரவுகளை ஒன்று அல்லது மேற்பட்ட சுழலும் வட்டுகளின் மேற்பரப்பில் மின்னணு, காந்த, ஒளி அல்லது இயற்பு இயக்க மாற்றங்களின் மூலம் பதிவு செய்யும் சேமிப்புப் பொறிமுறைகளின் ஓர் பொதுவான வகை. வட்டு இயக்கி என்பது சேமிப்பு பொறிமுறையை செயல்படுத்தும் ஓர் சாதனம்; பொதுவாக இது வட்டு ஊடகத்தினின்றும் வேறுபடுத்தி அறியப்படும். நீக்க இயலாத வட்டு அடங்கிய வன் வட்டு இயக்கி, நெகிழ் வட்டு இயக்கியும் அதன் நீக்கக்கூடிய நெகிழ் வட்டும், பிற ஒளி வட்டு இயக்கிகள், அதனோடு தொடர்புடைய ஒளி வட்டு ஊடகம் முதலியவை வட்டு சேமிப்பு சாதனங்களில் குறிப்பிடத்தக்க வகைகள்.
பின்புலம்
[தொகு]ஒலி தகவல்கள் முதலில் தொடர்முறைகளில்(அனலாக் முறைகள்) பதிவு செய்யப்பட்டன. அது போலவே முதல் நிகழ்பட வட்டுகளும் அனலாக் முறைகளையே பயன்படுத்தி பதிவு செய்தன. இசை துறையில் பதிவு முறையில் பயன்படுத்தப்பட்ட அனலாக் முறை பெரும்பாலும் எண்ணிம ஒளித் தகவல்களாக பதியப்படும் எண்ணிம ஒளி (ஆப்டிகல்) தொழில்நுட்ப முறைகளால் பதிலீடு செய்யப் பட்டுவிட்டன. [1]
அணுக்க முறைகள்
[தொகு]எண்ணிம வட்டு இயக்கிகள் என்பவை கணினி தரவு சேமிப்பு சாதனங்கள் ஆகும். ஒவ்வோர் வட்டும் வருமுறை பாளங்களாக, பிரிவுகளின் தொகுப்புகளாகப் பகுக்கப்படும். பாளங்கள் அவற்றின் வருமுறை பாள முகவரிகளால் அறியப்படும்.வட்டுகளில் எழுதுவதும், அவற்றிலிருந்து தரவுகளைப் படிப்பதும் பாளங்களின் நுணுக்க அளவிலேயே நிகழும்.
சுற்று வேகம், தட அமைப்பு
[தொகு]இயக்கிக்குள் நேரும் இயற்பு இயக்கம் இரு விதமான இயக்கங்களில் நிகழும். சாதனத்துள் வட்டைச் சுழற்றும் இயக்கம் ஒன்றும், வட்டின் குறுக்கு நெடுக்காக தடங்களுக்கிடையில் நகரும் எழுதுமுனையின் பக்கவாட்டு இயக்கம் மற்றொன்று.
இருவிதமான வட்டு சுழல் முறைகள்:
- நிலையான நேர்கோட்டு வேகம் (ஒளிசார் சேமிப்புகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது) ஒளித்தட்டின் சுழல் வேகத்தை எழுதுமுனையின் இடத்திற்கேற்றவாறு மாற்றுவது
- நிலையான கோண வேகம் (வன் வட்டு இயக்கிகள், சில ஒளி வட்டு அமைப்புகள், வினைல் ஒலிப் பதிவுகள் முதலியவற்றில் பயன்படுத்தப்படுவது) எழுதுமுனை எங்கிருந்தாலும் வட்டை சீரான வேகத்தில் சுழற்றும்.
அடிப்படை சொல்லியல்
[தொகு]- தட்டு (Platter) – பதிவு செய்யும் தனி தட்டு. ஓர் வன் வட்டு இயக்கி பல தட்டைகளின் தொகுதியைக் கொண்டிருக்கும்.
- தண்டு (Spindle) – தட்டுகள் ஏற்றி அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் சுழல் அச்சு.
- சுழற்சி (Rotation) – தட்டுகள் சுழலும்; பொதுவாக இரு உத்திகள்:
- நிலையான கோண வேகம் (Constant angular velocity (CAV)) வட்டுகளை நிலையான வேகத்தில் (நிமிட சுழற்சி விகிதம்) சுழல வைக்கும். இதனால் ஒரு நொடிக்கு எழுதுமுனை உட்தடங்களைக் காட்டிலும் வெளித்தடங்களில் அதிக தொலைவு கடக்கும். வன் வட்டு இயக்கிகளில் இவ்வுத்தி வழக்கமானது.
- நிலையான நேர்கோட்டு வேகம்(Constant linear velocity (CLV)) ஒரு நேர அலகிற்கு எழுதுமுனை நகரும் தொலைவு நிலைத்து வைக்கப்படும். வெளித்தடங்களில் எழுதுமுனைகள் பயணிக்கும்போது வட்டு சுழலும் வேகம் குறைக்கப்படும். இவ்வுத்தி குறுவட்டு இயக்கிகளில் வழக்கமானது.
- தடம் (Track) – தட்டின் மேற்பரப்பில் பதிக்கப்படும் ஒற்றை தரவு வட்டம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ரிச்சர்ட் எல். மூர்; et al. (3 மே 2007). "(ஆங்கிலம்) வட்டு மற்றும் நாடா சேமிப்பு விலை மாதிரிகள்" (PDF). San Diego Supercomputer Center, UCSD. பார்க்கப்பட்ட நாள் 20 ஃபிப்ரவரி 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)