வட்டுக்கோட்டைத் தீர்மானம்
(வட்டுக்கோட்டைப் பிரகடனம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
வட்டுக்கோட்டைத் தீர்மானம் யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டை யில் 1976 மே 14 ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும். தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்பதே அத் தீர்மானத்தின் சாராம்சம் ஆகும். 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் பிரதேசங்களில் பெரும் வெற்றி பெற்றது.
வட்டுக்கோட்டை பிரகடனம்[தொகு]
ஈழத்தமிழர்களுக்காக ஈழத் தந்தை எனப்படும் செல்வநாயகம் தலைமையில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டை எனும் தொகுதியில் வழகம்பரை அம்மன் கோவில் அருகில் மிக பிரமாண்ட அரங்கில் பிரகடனம் செய்தனர்.[1]
- இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும்.
- அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும்.
- அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண்டும்