வட்டி (ஓலைப்பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வட்டி அல்லது றாவட்டி என்பது என்பது, பனையோலையால் செய்யப்படும் ஐஸ்கிரீம் கோன் போன்ற வடிவில் இருக்கும் அளவில் மிகப் பெரிய ஒரு வகைப் பெட்டி ஆகும். இது வயலுக்குத் தண்ணீரைப் பாய்ச்சப் பயன்படுத்தப்பட்டுவந்தது.

இது ஏறக்குறைய 10 முதல் 15 லிட்டர் நீர் கொள்ளளவு கொண்ட ஒரு கலம். இக்கலத்தின் விளிம்புகள் உறுதியாக இருப்பதற்கு மட்டையைக் கட்டிவிடுவார்கள். அப்படியே, பனை நார் கொண்டு வட்டியை ‘பொத்துவதும்’ உண்டு. நார் கொண்டு பொத்தும்போது அதன் உழைப்புத் திறன் அதிகமாகிறது. வட்டியின் இரு முனைகளையும் இணைக்கும் பனை நார்க்கயிறும் உண்டு.[1]

வட்டியின் இருபுறமும் நீண்ட இரு தென்னை நார்க்கயிறுகள் கட்டப்பட்டிருக்கும். இக்கயிறுகளை இருபுறமாக இருவர் பற்றிக்கொண்டு, தாழ்விடத்திலிருந்து இசைவாகத் வயலுக்குத் தண்ணீரைப் பாய்ச்சப் பயன்படுத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. காட்சன் சாமுவேல் (30 சூன் 2018). "நீர் வார்க்கும் வட்டி". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டி_(ஓலைப்பொருள்)&oldid=3578200" இலிருந்து மீள்விக்கப்பட்டது