வட்டலாப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வட்டலாப்பம்
மாற்றுப் பெயர்கள்வத்தலப்பம்
வகைPudding
பரிமாறப்படும் வெப்பநிலைஇனிப்பு-விருந்துக்குப் பின்
தொடங்கிய இடம்இலங்கை
பகுதிஇலங்கை
முக்கிய சேர்பொருட்கள்தேங்காய்ப்பால் அல்லது செறிவூட்டப்பட்ட பால், வெல்லம், முந்திரி, முட்டை, ஏலம், கிராம்பு, சாதிக்காய், பிற மசலாப் பொருட்கள்

வட்டலாப்பம் (Watalappam)(சிங்களம்:වටලප්පන්; இலங்கை மலாய்:serikaya) என்பது தேங்காய் கூழ் தேங்காய் கலப்புனவு ஆகும். இதில் செறிவூட்டப்பட்ட பால், வெல்லம், முந்திரி, முட்டை, பல்வேறு மசாலா பொருட்கள் (ஏலக்காய், கிராம்பு[1] மற்றும் சாதிக்காய் உள்ளிட்ட) சேர்க்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் தடித்த பாண்டான் சாறு அல்லது துருவப்பட்ட வெனிலா காய் சேர்க்கப்பட்டிருக்கும்.

18ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தர் கால இலங்கை ஆட்சியின் போது இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்குக் குடிபெயர்ந்த இலங்கை மலாய்க்காரர்களால் இந்த உணவு கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.[2] வட்டலாப்பம் என்பது தமிழ் மொழியில் மருவிய சொல்லாக இருக்கலாம். வாட்டில் (Vattil) என்பது கோப்பையினையும் மற்றும் அப்பம் என்பது அணிச்சலையும் குறிக்கும். இதனாலே இது வட்டலாப்பம் (கப் கேக்) என அழைக்கப்படுகிறது. இந்த உணவு உண்மையில் தமிழ் மக்கள் அறிந்திருக்கவில்லை. முட்டை, தேங்காய்ப் பால், பனை சர்க்கரை மற்றும் பாண்டன் அல்லது ஸ்க்ரூபின் இலைகளால் வேகவைத்த உணவான இது செரிக்காயா எனப்படும் மலாய் இனிப்பு வகையிலிருந்து பெறப்படுகிறது. தோற்றத்தின் அடிப்படையில் இரண்டு உணவுகளுக்கும் ஒற்றுமையுள்ளது.[3] இது இடச்சுக்காரர்களிடமிருந்து பெறப்பட்ட வார்த்தையாகக் கூட இருக்கலாம். விலா அதாவது கஸ்டார்ட் என்பது வட்டார வழக்காக இலங்கை சோனகர் வட்டாரத்தைப் பயன்படுத்தி வட்டில்-அப்பன் என்ற தமிழ்ப் பெயராகப் பயன்படுத்தப்பட்டது.[4]

இலங்கையின் முசுலீம் சமூகத்துடன் தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட இனிப்பான இது, ஈகைத்திருநாள், ரமலான், திருமணங்கள், மத விழாக்கள் மற்றும் பிற சமூக விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் போது பிரபலமாக உள்ளது.[5]

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Decline of Watalappam". Daily News (Colombo, Sri Lanka). 31 August 2012. http://archives.dailynews.lk/2012/08/30/fea02.asp. 
  2. "Watalappan - My SriLankan Recipes" (in அமெரிக்க ஆங்கிலம்). 15 October 2013. Archived from the original on 6 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 15 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Hussein, Asiff. "The origins of some Sri Lankan Muslim Foods and Beverages". Sailan Muslim Foundation. பார்க்கப்பட்ட நாள் 26 May 2020.
  4. "Brace Yourself: Watalappam Season Is Here". 6 July 2016. https://roar.media/english/life/food/brace-wattalapam-season/. 
  5. Ashwin Rajagopalan, Ashwin (1 July 2019). "Watalappan - Sri Lanka's Most Famous Dessert". NDTV Food. பார்க்கப்பட்ட நாள் 20 May 2020.

 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டலாப்பம்&oldid=3629819" இலிருந்து மீள்விக்கப்பட்டது