வட்டக்கல்வலசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வட்டக்கல்வலசு
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


வட்டக்கல்வலசு தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிளாம்பாடி பேரூராட்சியில் உள்ள ஒரு கிராமம். ஈரோடு-கரூர் நெடுஞ்சாலையில் கருமாண்டாம்பாளையம் சந்திப்பில் இருந்து தெற்கே 1 கிமீ தொலைவில் இந்த ஊர் உள்ளது. இந்த ஊரில் சுமார் 120 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த ஊரில் கிளாம்பாடி நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலகம் உள்ளது. கொங்கு வேளாள கவுண்டர்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். கூட்டுறவு பால் கொள்முதல் நிலையமும் இங்கு உள்ளது. ஊருக்கு மத்தியில் விநாயகர் கோவிலும் குழந்தை மாரியம்மன் கோவிலும் உள்ளன. காளிங்கராயன் கால்வாய் ஊரின் கிழக்கே செல்கிறது. மலையம்பாளையம் காவல் நிலையம் அரை கிமீ தொலைவில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டக்கல்வலசு&oldid=3084895" இலிருந்து மீள்விக்கப்பட்டது