வடு (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடு பிரான்சிலிருந்து 2000களில் வெளிவந்த ஓர் இதழாகும். தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் சார்பில் மாதாந்த வெளியீடாக இது வெளிவந்தது. இதன் முதல் இதழ் சூன் 2007 இதழாக வெளிவந்தது. இவ்விதழின் ஆண்டு சந்தாவாக 15 யுரோக்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

முதல் இதழ் சமர்ப்பணம்[தொகு]

தீண்டாமைக்கெதிரான போராட்டங்களில் முன்னின்று மரணித்துப் போன போராளிகளுக்குச் சமர்ப்பணம்.

தொடர்பு முகவரி[தொகு]

தவதாசன் 4 பேஸ் ரோக சலம்ப ரோட், 95140 ஜோகஸ் லீஸ், பொனீஸ், பிரான்ஸ்

உள்ளடக்கம்[தொகு]

தமிழ் சமூகம் கொண்டுள்ள சாதி ஏற்றத்தாழ்வுகளிலும், இலங்கையில் நடக்கும் சாதிக் கொடுமைகளும் புகலிடத்தில் நடைபெறும் சாதி காப்பாற்றுவதற்கான முனைவுகளையும் பகிரங்கப்படுத்தும் நோக்கத்தில் இதன் ஆக்கங்கள் காணப்பட்டன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடு_(இதழ்)&oldid=861031" இலிருந்து மீள்விக்கப்பட்டது