வடிவீஸ்வரம்
வடிவீசுவரம் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 8°10′46″N 77°26′20″E / 8.17944°N 77.43889°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி மாவட்டம் |
ஏற்றம் | 15 m (49 ft) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 629 002 |
தொலைபேசி இணைப்பு எண் | 04652 |
வாகனப் பதிவு | தநா74 |
வடிவீசுவரம் (Vadiveeswaram) தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரின் கிழக்குப் பகுதியில் பழையாற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இந்த கிராமம் முதலில் பிராமணர்கள் வாழ்ந்த அக்ரகாரம் ஆகும். 19-ஆம் நூற்றாண்டில் நன்கு அறியப்பட்ட நீலகண்ட சிவன் இவ்வூரில் பிறந்தார்.
நிலவியல்
[தொகு]வடிவீசுவரம் பழையாறு ஆற்றிலிருந்து[1] 8°10′46″N 77°26′20″E இல்[2] அமைந்துள்ளது. மேலும், பெரிய தெரு, பெரியவா தெலுங்கு, தளவாய் (தளவழி) தெரு, மேட்டு தெரு, கிழக்கு ரத தெரு , மேற்கு ரத தெரு, சாஸ்தன் கோவில் தெரு மற்றும் கல்மாடத் தெரு ஆகிய தெருக்களைக் கொண்டுள்ளது.
2001-ஆம் ஆண்டில், இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, வடிவீசுவரத்தில் 81 விழுக்காடு கல்வியறிவு பெற்ற 5,254 மக்கள் வசிக்கின்றனர்.[3]
நாகர்கோவில் இரயில் நிலையம் அருகிலுள்ள இரயில் நிலையமாகும். இது மையத்திலிருந்து (முக்கிய வீதிகள்) சுமார் 5 நிமிட நடைப்பயணத்தில் உள்ளது.
கருநாடக இசையமைப்பாளர் நீலகண்ட சிவன் 1839-இல் வடிவீசுவரத்தில் பிறந்தார். திருநீலகண்ட போதம் என்ற படைப்பில் அவர் பிறந்த இடத்தை இரண்டு முறை குறிப்பிட்டுள்ளார். 2007இல் கிராமத்தில் கர்நாடக இசை விழா நடைபெற்றது.[4]
சான்றுகள்
[தொகு]- ↑ Autobiography of Thanu Harihara Iyer-T.H.IYER, accessed April 2009.
- ↑ maplandia.com.
- ↑ IndianNGOs.com Census of India 2001: Vadiveeswaaram, Google cache of the page accessed April, 2009.
- ↑ Thyagaraja aradhana celebrated , The Hindu, 10 January 2007.