வடிவமைப்புத் தத்துவம்
வடிவமைப்புத் தத்துவம் (Philosophy of design) என்பது வடிவமைப்பின் வரையறைகள், வடிவமைப்பின் அனுமானங்கள், அடிப்படைகள் மற்றும் விளைவுகள் பற்றிய ஓர் ஆய்வு ஆகும். ஒரு வடிவமைப்பு அழகாக மட்டுமல்ல, பயனுள்ளதாகவும், மனித தேவைகளுக்கு ஏற்றதாகவும், சமூக மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புடன் இருக்க வேண்டும்” என்ற எண்ணத்தை இத்துறை மையமாகக் கொண்டுள்ளது. பெரும்பாலும் அழகியலின் ஒரு துணைத் துறையாக இருக்கும் இந்தத் துறை, குறிப்பிட்ட சிக்கல்களின் தொகுப்பில் உள்ள ஆர்வம் அல்லது வடிவமைப்பில் உள்ள மையம் அல்லது அடிப்படை அக்கறைகளில் உள்ள ஆர்வம் ஆகியவற்றால் வரையறுக்கப்படுகிறது. ஒட்டுமொத்த வடிவமைப்பிற்கான இந்த மையப் பிரச்சனைகளுக்கு மேலதிகமாக, பல வடிவமைப்புத் தத்துவ அறிஞர்கள் இந்தப் பிரச்சனைகளை கலைத் தத்துவம் போன்ற குறிப்பிட்ட துறைகளுக்குப் பொருந்தும் விதத்தில் கருத்தில் கொள்கின்றனர்.
பெரும்பாலான வல்லுநர்கள் அழகியலில் நிபுணத்துவம் பெற்ற தத்துவஞானிகளாக, அழகியல் அறிஞர்களாக இருந்தாலும், பல முக்கிய வடிவமைப்பாளர்களும் கலைஞர்களும் இந்தத் துறைக்கு பங்களித்துள்ளனர். வடிவமைப்புத் தத்துவம் பற்றிய அறிமுகத்திற்கு, இராயல் டேனிசு கலை அகாடமியில் பெர் கேல் எழுதிய கட்டுரை உதவும்.
பயன்பாட்டுத் தன்மை, அழகியல், நெறிமுறையும் மதிப்பீடும், மனித மையம், சுற்றுச்சூழல் பொறுப்பு, புதுமை ஆகியன வடிவமைப்புத் தத்துவத்தின் முக்கிய அம்சங்களாகும்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
[தொகு]வடிவமைப்புத் தத்துவவியலாளர்கள், அல்லது வடிவமைப்பின் தத்துவவியல் ஆய்வுடன் தொடர்புடைய தத்துவவியலாளர்கள்:
- எல் புரூசு ஆர்ச்சர்
- உரோலண்டு பார்த்தசு
- ஆனி பால்சமோ[1]
- இழீன் பௌத்ரிலார்டு
- ஆல்பர்ட்டு போர்குமான்
- இரிச்சர்டு புச்சனன்
- கிளைவ் தில்நாட்டு[2]
- இயோகனா திரக்கர்[3]
- உம்பெர்த்தோ எக்கோ
- கேமரன் டோங்கின்வைசு
- விலெம் பிளசர்[4]
- இயேன் பார்சே
- தோனி பிரை[5]
- புருனோ லேட்டர்[6]
- மார்சல் மெக்குலன்
- பெர் மோலரெப்பு[7]
- விக்டர் பாப்பனெக்கு
- கிளென் பார்சன்சு
- மார்ட்டின் எய்டெகர்
- பெர்னார்டு சிடீக்ளர்
- பீட்டர் பால் வெர்பீக்கு[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Balsamo, Anne (2011). Designing culture : the technological imagination at work. Durham NC: Duke University Press. ISBN 978-0822344452.
- ↑ Dilnot, Clive (2017). "Design, knowledge and human interest". Design Philosophy Papers 15 (2): 145–163. doi:10.1080/14487136.2017.1388963.
- ↑ Drucker, Johanna (2014). Graphesis: Visual forms of knowledge production. Cambridge, Massachusetts: Harvard University Press. ISBN 978-0-674-72493-8.
- ↑ Flusser, Vilém (1999). The shape of things: a philosophy of design. London: Reaktion. ISBN 9781861890559.
- ↑ Fry, Tony (September 2020). Defuturing: A New Design Philosophy. Radical Thinkers in Design. London, England: Bloomsbury Visual Arts.
- ↑ Latour, Bruno (2009). "A Cautious Prometheus? A Few Steps Toward a Philosophy of Design (With Special Attention to Peter Sloterdijk)". In Fiona Hackne, Jonathn Glynne; Minto, Viv (eds.). Proceedings of the 2008 Annual International Conference of the Design History Society -- Falmouth, 3-6 September 2009 (PDF). Universal Publishers. pp. 2–10.
- ↑ Mollerup, Per (2019). Pretense Design: Surface over Substance. MIT Press.
- ↑ Verbeek, Peter-Paul (2005). What Things Do: Philosophical Reflections on Technology, Agency, and Design. Pa., Pennsylvania State University Press. ISBN 0271025395.