வடிவமைக்கப்பட்ட மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வடிவமைக்கப்பட்ட அல்லது கலையிடை மொழி, என்பது வடிவ மொழி என்றும் அறியப்படுகிறது.வடிவ மொழி என்பது ஒரு வகையான மொழி. இதன் உச்சரிப்பு, இலக்கணம் மற்றும் வார்த்தைகள் ஒரு தனிப்பட்ட அல்லது ஒரு குழுவினரிடம் இருந்து முழுவதும் வேறுபடும்.இதன் வரலாறு இயற்கையாக பண்பாட்டைச் சாராமல் வேறுபடுகிறது.இம்மொழிகளை உருவாக்க பல்வேறு காரணங்கள் உள்ளன.மனித தகவல் தொடர்பு, குறியீட்டிற்காகவும், அறிவியல் மற்றும் வடிவமைக்கப்பட்ட உலகம் பற்றிய வாழ்க்கை கண்ணோட்டத்திற்காகவும் உருவாக்கப்படுகின்றன. மொழி ஆராய்ச்சிக்காகவும், ஒருவருடைய மொழியார்வத்தை நிறைவு செய்யவும்,மொழி சம்பந்தப்பட்ட விளையாட்டுக்களை உருவாக்கவும் உதவுகின்றன. நிர்ணய மொழி என்ற சொல் சில சமயம் அனைத்துலக தனியுரு மொழியை குறிக்கிறது.ஒரு சிலர் செயற்கை என்ற சொல்லாட்சியை ஒப்புக்கொள்வது இல்லை. Esperanto என்ற மொழியை பயன்படுத்துபவர்கள் செயற்கை என்ற சொல்லாட்சியை ஒப்புக்கொள்வதில்லை. நிர்ணய மொழி என்று அழைக்கப்படும் போது வடிவமைக்கப்பட்ட மொழி என்று அழைக்கப்படுவதன் கடினத்தன்மை குறைக்கப்படுகிறது. வடிவமைக்கப்பட்ட மொழி என்பது சிலசமயங்களில் அனைத்துலக தனியுரு மொழியையும் குறிக்கிறது.எ.கா இன்டர்லிங்குவா இது இயற்கையாக கிடைக்கப்பெரும் சொற்களையும், பொருள்களையும் கொண்டு இன்டர் நேஷனல் ஆக்சிலரி லாங்குவேஜ் அசோசியேசனால் தரப்படுத்தப்பட்டுள்ளது.

மொழிவடிவமைப்பு-ஓவியம் ,இசை,இன்டீரியல் டெகரேஷன், சமையல் போன்று ஒரு கலைதான்.உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் இவற்றில் ஈடுபட்டுள்ளனர்.மொழிவடிவமைப்பு மென்பொருள்களும் உருவாக்கப்பட்டுள்ளன.இவற்றை கொண்டு மொழி வடிவமைப்பாளர்கள் புதிய சொற்களை உருவாக்குகிறார்கள்.இவர்களில் பலர் ஊடகங்களுக்கான மொழிவடிவமைப்பில் உதவுகிறார்கள்.பல ஆங்கிலப் படங்கள் இவர்களின் உதவியுடன் எடுக்கப்பட்டுள்ளது, இது படங்களில் வேற்றுகிரக வாசிகள் பேசுவதாகவும்,வேற்றுலக பின்புறத்திலும் ஒரு வேறுபட்ட நடைமுறையில் காணப்படாத மிருகங்கள் பேசுவதாகவும் காட்ட பயன்படுத்தப்படுகிறது.இந்தியாவிலும் சில படங்களில் பொருளற்றுப் பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகில் பல்லாயிரக்கணக்கான வடிவ மொழிகள் புழக்கத்தில் உள்ளன.

மொழிவடிவமைப்பாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பல மொழிகளை தெரிந்தவர்களாக உள்ளனர். இவற்றில் பல யாருக்கும் தெரிவதில்லை,மொழியை உருவாக்கியவருக்கும்,அவரது நண்பர்கள் உறவினர்கள் சிலருக்கு மட்டும் தெரியலாம்.சிலர் தம் குழந்தைகளுக்கு அவற்றை பயிற்றுவிக்கின்றனர்.ஆனால் அவர்கள் உருவாக்கிய சொற்கள் சில சமயம் அவருடைய முதல் மொழியில் பயன்படுத்தப்படுகின்றன.

இசை குறியீடுகளை குறிக்கும் மொழி, சுருக்க குறியீட்டு மொழி, பயடுவடிவமொழி என்பன அனைத்தும் வடிவமைக்கப்பட்ட மொழிகளே.மேலும் பல வகைகளில் அறிவியல் மற்றும் கணினி சம்பந்தப்பட்டவைகளில் இது வடிவமொழி என்று உணராமலே பயன்படுத்தப்பட்டு வருகிறது.புரோகிராமிங் மொழிகளுக்கான சின்டாக்ஸ் வடிவமைக்கப்பட்ட மொழிவகையை சார்ந்ததாகும்.அது பயன்பாட்டில் இருக்கும் வரையில் பரவலாக அறியப்படும்.அதன் பின் அதை கற்றுக்கொள்ள யாரும் முன் வருவதில்லை,புதிய சின்டாக்ஸ் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலும் பல வடிவமொழிகள் புழக்கத்தில் உள்ளன.அவற்றை பற்றி அறிய அவற்றுள் சில இங்கு தொகுக்கப்பட்டுள்ளது

இந்திய வடிவமொழிகள்[தொகு]

அனைத்துலக வடிவமொழிகள்[தொகு]