வடவள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வடவள்ளி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 24,700 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

வடவள்ளி (ஆங்கிலம்:Vadavalli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதி ஆகும்.

வரலாறு[தொகு]

"வடவழி" என்ற சொல்லே வடவள்ளி என்றானது இவ்வூர் மருதமலைக்கு செல்லும் வழியில் வடக்கே கணுவாய் செல்லும் வழி பிரியும் இடத்தில் அமைந்த காரணத்தால் அல்லது கிழக்கே இடையர்பாளையத்தில் இருந்து மருதமலைக்கு வரும் வழி வடக்கிலிருந்து வந்து இணையும் இடத்தில் உள்ளதால் "வடவழி" என பெயர்பெற்றது. வடவள்ளியில் மருதமலையில் இருந்து வரும் "ஊத்தாம் பள்ளம்" என்ற ஆறு ஓடுகின்றது.இவ்வூரே மருதமலைக்கு செல்லும் வழியில் கடைசி பசுமையான ஊராக இருந்தது,வடவள்ளி கரும்பு, வாழை, நெல்,தென்னை என விவசாயம் செழித்த பசுமையான ஊராக ஐம்பதாண்டுகளுக்கு முன் இருந்தது.வடவள்ளிக்கு மேற்கே மருதமலை வரை வானம் பார்த்த பூமியாகவே இருந்தது இங்கு அரசாணிகாய்,தட்டை பயிறு,சோளம் முதலியன விளைந்தன.இவ்வூரில் முன்னாளில் முதலியாரும் கவுண்டருமே அதிகமாக இருந்தனர்,மேலும் பாப்பநாயக்கன் புதூர் ஒட்டிய பகுதியில் நாயக்கரும்,வடவள்ளி ஊருக்கு கிழக்கில் கோனாரும் அதிகளவில் வசித்து வந்தனர்

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,700 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வடவள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வடவள்ளி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

இங்கிருந்து 4 கி.மீ தொலைவில் மருதமலை முருகன் கோவில் (http://www.murugan.org/temples/marudhamalai.htm) அமைந்துள்ளது. வடவள்ளியிலிருந்து 3 கி.மீ தொலைவில் மருதமலை செல்லும் வழியில் பாரதியார் பல்கலைக்கழகம் (http://www.b-u.ac.in) அமைந்துள்ளது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடவள்ளி&oldid=2286004" இருந்து மீள்விக்கப்பட்டது