உள்ளடக்கத்துக்குச் செல்

வடலூர் சுற்றுலா இடங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடலூர் தமிழ் நாடு மாநிலம் கடலூர் மாவட்டம் குறிஞ்ப்பாடி வட்டத்தில் அமைந்துள்ளது. வடலூர் ஒரு ஆன்மீக தலமாகும். அது மட்டுமல்லாமல் இவ்வூரில் நான்கு திசைகளிலும் புகழ்பெற்ற சிவன் கோயில்கள் உள்ளன.

1சத்திய சபை

2.சத்திய தருமச்சாலை

3.சித்திவளாகம்.மேட்டுகுப்பம்

4.வள்ளலார் அவதார தலம்.மருதூர்

5. எலுமிச்சை ராமசாமி சித்தர் பீடம்

6, கருங்குழியில், வள்ளலார் தங்கி திருஅருட்பா எழுதினார், அங்கு தண்ணீராால் விளக்கு எரித்து அற்புதம் நிகழ்த்தியதாக கூறப்படும், இடத்தில் இன்றளவும், வழிபாடு செய்யப்படும் இடமாக உள்ளது, மேலும் வள்ளலார் வழிப்பாடு செய்த, பிள்ளையார்கோயில், லட்சுமிநாராயண பெருமாள் கோவிலும் இங்கு உள்ளது

7. முருகானந்தம் ஆசிரமம் புதுநகர் வடலூர்

8.ஆஞ்சநேயர் கோவில் புதுநகர் வடலூர்


வடலூரை சுற்றியுள்ள தலங்கள்[தொகு]

5.5.1.கிழக்கில்.பாடலீஸ்வரர் கோயில்.கடலூர். 5.2.மேற்கில்.விருத்தகிரீஸ்வரர் கோயில்.விருத்தாசலம். 5.3.தெற்கில்.நடராஜர் கோயில்.சிதம்பரம். 5.4.வடக்கில்.வீரட்டானேஸ்வரர் கோயில்.பண்ருட்டி 5.5.நடராஜர் கோயில்.நெய்வேலி நகரம்.

1.சத்தியஞான சபை. இது வள்ளலார் என அழைக்கப்படும் இராமலிங்க அடிகளால் வடலூரில் நிறுவப்பட்டுள்ளது இந்த சபை தெற்கு நோக்கி அமைந்துள்ளது.64 கோண வடிவில் அமைக்கபட்டுள்ளது இதன் சிறப்பாகும். இச்சபையை சுற்றிலும் இரும்பு சங்கிலி அமைக்கப்பட்டுள்ளது.நூற்றாண்டை கடந்த பின்னரும் சங்கிலி துருபிடிக்காதிருப்பது இதன் சிறப்பு.தைப்பூச உற்சவ நாளில் சபையில் வாயிலில் தொங்கவிடப்பட்டுள்ள ஏழு திரைகளைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.வள்ளலார கடவுளை ஜோதி வடிவில் தரிசித்தார்.இறைவன் ஒளி வடிவில் இருக்கிறான் என கூறினார். அதனால்தான் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.ஒவ்வொரு மாதத்திலும் வரும் பூச நட்சத்திரத்திலும் ஜோதி தரிசனம் உண்டு.

2.சத்திய தருமச்சாலை.

உயிர்கள் பசியால் துன்புறுவதைக் கண்டு மனம் நொந்தார்.வாடிய பயிரை கண்டபோதெல் லாம் வாடினார்.மக்களின் பசிப்பிணி போக்க வடலூரில் சத்திய தருமச்சாலையை நிறுவினார்.இங்கு தினந்தோறும் ஏழைகள்,பரதேசிகள்,துறவிகள்,பிச்சைக்காரர்கள்,பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள் ஆகியோருக்கு உணவளித்து பாதுகாத்து வருகின்றனர்.

3.சித்திவளாகம். மேட்டுகுப்பம் இங்குதான் ராமலிங்க அடிகளார் சித்தி அடைந்தார்.இங்குள்ள ஒரு வீட்டில் தன் அடிய வர்கள் வெளியில் இருக்கும்போது அடிகளார் ஒரு அறைக்குள் சென்று கதவை மூடி திருகாப்பிட்டு கொண்டார்.அவரை பின்னர் காணவில்லை என கூறப்படுகிறது.இவ்வீட்டை ஆன்மீக அன்பர்கள் தரிசிக்க வேண்டிய இடமாகும்.

வள்ளலார் அவதார தலம்.மருதூர். இந்த ஊர் வடலூர் சிதம்பரம் சாலையில் சற்று கிழக்கில் உள்ளது.இங்குதான் பிறந்தார்.அவர் பிறந்த வீட்டை பாதுகாத்து வருகின்றனர்.

5.1வடலூரின் கிழக்கில் சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது கடலூர்.இங்கு திருப்பாதிரிபுலியூர் என்ற இடத்தில் பாடலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.இக்கோயில் சைவ சமய குரவர்களால் பாடப்பட்ட பெருமை உடையது.பேருந்து நிலையத்திலிருந்து நடந்துசெல்லும் தூரத்தில் உள்ளது.

5.2மேற்கில் விருத்தகிரீஸ்வரர் கோயில்.விருத்தாசலம். வடலூரிலிருந்து மேற்கே கடலூர்-சேலம் சாலையில் சுமார் 29 கி.மீ தொலைவில் உள்ள விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது.இது சிவன் கோயில். தமிழில் பழமலைநாதர் என அழைக்கபடுகிறார்.நாயன்மார்களால் பதிகம் பாடப்பட்ட தலமாகும்.அம்மைக்கு தனி சந்நிதி உண்டு. இகோயிலின் கீழ்புறம் மணிமுத்தாறு ஓடுகிறது.விருத்தாசலம் பாலக்கரையில் இறங்கினால் நடந்து செல்லும் தூரத்தில் கோயில் உள்ளது.

5.3.தெற்கில்.நடராஜர் கோயில்.சிதம்பரம். வடலூரிலிருந்து சுமார் 36 கி.மீ தூரத்தில் சிதம்பரம் உள்ளது.சிதம்பரம் நடராஜர் கோயில் உலகப்புகழ் பெற்றது.நான்கு நிலை மாடங்கள் கண்ணைக்கவரும் அழகுடன் விளங்குகிறது.ஆண்டுதோறும் இங்கு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். இகோயிலின் வடகிழக்கில் காளிகோயில் உள்ளது.

5.4.வடக்கில்.வீரட்டானேஸ்வரர் கோயில்-பண்ருட்டி பண்ருட்டி பேருந்து நிலையத்திலிருந்து கிழககில் சுமார் 2 கி.மீ தொலைவில் திருவதிகை என்ற ஊரில் இகோயில் உள்ளது.இகோயிலின் எழுந்தருளியுள்ள இறைவன் அப்பருக்கு சூலை நோயை கொடுத்து சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியதாக வரலாறு கூறுகிறது.அப்பரின் தமக்கை திலகவதி யார் இங்கு தங்கி பணிச்செய்தார்.ஆன்மீக அன்பர்கள் தரிசிக்க வேண்டிய தலமாகும்.

5.5 நடராஜர் கோயில்-நெய்வேலி வடலூரிலிருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் நெய்வேலி உள்ளது.இங்கு வட்டம் 16 ல் இக்கோயில் உள்ளது.ஆசியாவிலேயே பெரிய நடராஜரின் வெண்கல சிலை இங்குள்ளது.தரிசிக்க சிறந்த கோயில்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடலூர்_சுற்றுலா_இடங்கள்&oldid=3816598" இலிருந்து மீள்விக்கப்பட்டது