உள்ளடக்கத்துக்குச் செல்

வடமராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வடமராச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வடமராட்சி
பிரிவு
நாடு இலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பெரிய நகரம்பருத்தித்துறை
பிரதேச செயலாளர் பிரிவுகள்
பரப்பளவு
 • மொத்தம்238.6 km2 (92.1 sq mi)
மக்கள்தொகை
 (2007)
 • மொத்தம்1,06,179
நேர வலயம்ஒசநே+05:30 (இலங்கை)

வடமராட்சி (Vadamaraadchi அல்லது Vadamarachchi), என்பது இலங்கையின் வட முனையில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஒரு புவியியற் பிரிவாகும். அண்ணளவாக 1262 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்ட யாழ்ப்பாணக் குடாநாடு, குடியேற்றவாத ஆட்சிக்காலங்களுக்கு முன்பிருந்தே வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. குடாநாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது வடமராட்சிப் பிரிவாகும்.

குடத்தனை மணற்குன்றுகள்

வடமராட்சிப் பகுதியானது வடமராட்சி வடக்கு, வடமராட்சி கிழக்கு, மற்றும் வடமராட்சி தென்மேற்கு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பெயர்

[தொகு]

வடமராட்சி என்பது "வடக்கு மக்களின் ஆட்சிப் பகுதி" என்பது பொருள். வடமார் என்பது வடக்கு மக்களைக் குறிக்கும்.[1] இங்கு வசிக்கும் மக்கள் வடமராட்சியார் என அழைக்கப்படுகின்றனர். முன்னர் வடமறவர் என்ற குறுநில மன்னர் ஆட்சி செய்த இடமாக இருந்தமையால் வடமறவர் ஆட்சி என அழைக்கப்பட்டு வடமராட்சி என மருவிற்று.

வடமராட்சியில் உள்ள ஊர்கள்

[தொகு]

வடமராட்சியில் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை போன்ற துறைமுகப் பட்டினங்களும், கற்கோவளம், அம்பன், குடத்தனை, நாகர்கோயில் போன்ற கடல்சார் கிராமங்களும், தும்பளை, புலோலி, அல்வாய், வதிரி, கரவெட்டி, கரணவாய், துன்னாலை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு போன்ற கிராமங்களும் உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vaṭamarāṭci, Teṉmarāṭci, Pirāmaṇāṭci, Mẹdavacciya". TamilNet. 22 January 2009. http://www.tamilnet.com/art.html?catid=98&artid=27701. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடமராட்சி&oldid=4422968" இலிருந்து மீள்விக்கப்பட்டது