வடபுதுப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடபுதுப்பட்டி
—  கிராமம்  —
வடபுதுப்பட்டி
இருப்பிடம்: வடபுதுப்பட்டி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°02′N 77°31′E / 10.04°N 77.51°E / 10.04; 77.51ஆள்கூறுகள்: 10°02′N 77°31′E / 10.04°N 77.51°E / 10.04; 77.51
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் க. வீ. முரளிதரன், இ. ஆ. ப [3]
ஊராட்சிமன்றத் தலைவர் பா. ரேணுப்பிரியா
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


வடபுதுப்பட்டி தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் வட்டத்துக்குட்பட்ட ஒரு ஊராட்சியாகும்.[4] வருவாய்த் துறைக் கணக்கீட்டில் இக் கிராமம் வடவீரநாயக்கன்பட்டி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[5]. வடபுதுப்பட்டி, மதுராபுரி, அழகாபுரி, அம்மாபுரம், அம்மாபட்டி, சொக்கத் தேவன் பட்டி, பின்னத் தேவன் பட்டி, சிந்தால்புரம், வடவீரநாயக்கன்பட்டி அரண்மனை உள்ளிட்ட பல ஊர்களை உள்ளடக்கிய ஊராட்சியாக இது இருக்கிறது. தேனியில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவிலும் பெரியகுளத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஊர் இருக்கிறது.

தொழில்[தொகு]

விவசாயமே இந்த ஊர் மக்களின் முக்கியத் தொழிலாக இருக்கிறது. இந்த ஊரைச் சுற்றிலும் இருந்த பல விளை நிலங்கள் தற்போது வீடுகளுக்கான மனை நிலங்களாக மாற்றமடைந்து விட்டதால் விவசாயத் தொழில் பாதிப்படைந்து போய்விட்டது. இதனால், இங்குள்ள மக்களின் விவசாயம் தொடர்புடைய தொழில்கள் குறைந்து போய்விட்டன. பலர் மாற்றுத் தொழிலாக, அருகிலுள்ள நூற்பாலைகள் மற்றும் பிற தொழில் நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்கின்றனர். இங்கு வாழை அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இதுவே இவ்வூரின் மிக முக்கியமான தொழிலாக உள்ளது.

சிறப்புகள்[தொகு]

தேனி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாவட்ட விளையாட்டு அலுவலகம் மற்றும் விளையாட்டுப் பயிற்சிக் கூடங்கள், மைதானம் போன்றவைகளை உள்ளடக்கிய மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் இந்த ஊராட்சி எல்லைக்குள் அமைந்துள்ளன.

ஊராட்சி மன்றத் தலைவரின் சிறப்புகள்[தொகு]

வடபுதுப்பட்டி ஊராட்சிமன்றத்தலைவர் திருமதி ரேணுபிரியா பாலமுருகன் அவர்கள் ஊர் மக்களுக்காக தனது சொந்த கிணற்றடி நீரை அளித்துள்ளார். இதனால் ஊர் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கின்றன. தண்ணீர் பற்றாக்குறை இல்லாத கிராமமாகத்திகழ்கிறது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்[தொகு]

இந்த ஊராட்சியின் எல்லைக்குள் கீழ்க்காணும் கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 • முத்தாலம்மன் இந்து உயர்நிலைப்பள்ளி
 • அரசு நடுநிலைப்பள்ளி (அம்மாபுரம்)
 • நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி
 • நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • உடையப்பா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
 • நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரி.

மருத்துவமனைகள்[தொகு]

 • அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
 • அரசுக் கால்நடை மருத்துவமனை

கோயில்கள்[தொகு]

முத்தாலம்மன் கோவில், அழகர் கோவில், விநாயகர் கோவில், சுப்பிரமணியர் கோவில், பெருமாள்கோவில், முனியாண்டி கோவில், சீலைக்காரி அம்மன் கோவில், ஜக்கம்மாள் கோவில், மந்தையம்மன் கோவில், கிருஷ்ணர் கோவில், பட்டாளம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் உள்ளன. அழகர் கோவில் திருவிழா, முத்தாலம்மன் கோவில் திருவிழாக்கள் ஊரின் மிக முக்கியமான திருவிழாக்கள் ஆகும். அனைத்து சாதியினரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் விழாக்களைக் கொண்டாடி மகிழ்வர்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-06-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-20 அன்று பார்க்கப்பட்டது.
 5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-08-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-20 அன்று பார்க்கப்பட்டது.

|group7 = இணையதளம்

|list7 =

}}

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடபுதுப்பட்டி&oldid=3570668" இருந்து மீள்விக்கப்பட்டது