உள்ளடக்கத்துக்குச் செல்

வடக்கு மண்டலக் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரஞ்சு நிறத்தில் வட இந்திய மண்டலக் குழுவின் கீழ் உள்ள மாநிலங்கள்

வடக்கு மண்டல குழு (Northern Zonal Council) என்பது, ஒரு மண்டல சபை ஆகும். இந்த மண்டலத்தில் சண்டிகர், தேசிய தலைநகர் டெல்லி, அரியானா, இமாச்சலப் பிரதேசம், சம்மு காசுமீர், பஞ்சாப், இராசத்தான் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு மண்டலக் குழுவாகும். 1956 இந்திய மாநில மறுசீரமைப்புச் சட்டம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மண்டலக் குழுக்களில் இதுவும் ஒன்றாகும். மண்டலத்திலுள்ள மாநிலங்களிடையே உள்ள பிணக்குகளை தீர்த்து வைப்பதற்கும், நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கும் மாநிலங்களுக்கு தேவையான ஆலோசனைகள் கூறுவதும் இம் மண்டலக் குழுக்களின் பணியாகும்.

இந்திய மாநிலங்களில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான ஒரு முழுமையான ஆலோசனை குழுவாக செயல்பாடுவதோடு மாநிலங்களுக்குள் இருக்கும் பொது நல விவகாரங்களுக்கும் இக்குழுக்கள் ஆலோசனை வழங்குவதாகும். 1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் மூன்றாம் பகுதி யின் படி,  ஐந்து மண்டல  குழுக்கள் அமைக்கப்பட்டன.[1][2][3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2017-07-16.
  2. http://interstatecouncil.nic.in/iscs/genesis/
  3. http://interstatecouncil.nic.in/iscs/wp-content/uploads/2016/08/states_reorganisation_act.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_மண்டலக்_குழு&oldid=3872750" இலிருந்து மீள்விக்கப்பட்டது