வடக்கு தாய்லாந்து
வடக்கு தாய்லாந்து
Northern Thailand ภาคเหนือ | |
|---|---|
வடக்கு தாய்லாந்து | |
| மிகப்பெரிய நகரம் | சியாங் மாய் நகரம் |
| மாகாணங்கள் | |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 96,077 km2 (37,096 sq mi) |
| மக்கள்தொகை (2019)[2] | |
| • மொத்தம் | 1,21,19,572 |
| • அடர்த்தி | 66/km2 (170/sq mi) |
| மொத்த உள்நாட்டு உற்பத்தி (பெயரளவு, 2024) | |
| • மெட்ரோ | ฿1.452 திரில்லியன் (US$41.237 பில்லியன்) |
| • தனிநபர் | ฿130,685 (US$3,711) |
| நேர வலயம் | தாய்லாந்து நேரம் +7 |
வடக்கு தாய்லாந்து அல்லது இலானா (ஆங்கிலம்: Northern Thailand; Lan Na,; தாய்: ภาคกลาง) என்பது தாய்லாந்தின் நிலப்பகுதிகளில் ஒன்றாகும். இந்த நிலப்பகுதி புவியியல் ரீதியாக பல மலைத்தொடர்களைக் கொண்டு வகைப்படுத்தப் படுகிறது. இந்த மலைத்தொடர்கள் அண்டை நாடான மியான்மரில் உள்ள சான் குன்றுகளில் (Shan Hills) இருந்து லாவோஸ் வரை நீண்டுள்ளன. மேலும் இந்த மலைகளுக்கு இடையே பாய்ந்து செல்லும் நதிப் பள்ளத்தாக்குகளையும் கொண்டுள்ளன.
தாய்லாந்தின் பெரும்பாலான பகுதிகளைப் போலவே, இதுவும் ஒரு வெப்பமண்டல சவன்னா காலநிலையைக் (Tropical Savanna Climate) கொண்டுள்ளது. இருப்பினும், வடக்கு தாய்லாந்தின் உயர்ந்த நிலப்பரப்பும் அட்சரேகையும் கூடுதலான பருவகால வெப்பநிலை மாறுபாட்டிற்கு பங்களிக்கின்றன. இதனால் மற்ற பிராந்தியங்களை விட இங்கு குளிர்காலம் அதிகமாகவே குளிர்ச்சியாக இருக்கும்.
வரலாற்றுப் பார்வையில், வடக்கு தாய்லாந்து அரிபுஞ்சயா பேரரசுடன் (Haripuñjaya) தொடர்புடையதாக இருந்துள்ளது. அரிபுஞ்சயா பேரரசு 7-ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் ஒரு சக்திவாய்ந்த அரசாக உருவெடுத்தது. இந்தப் பேரரசு, 6 முதல் 11-ஆம் நூற்றாண்டு வரை கோலோச்சிய துவாரவதி பண்பாட்டுடன் தொடர்பு உடையதாகும். அரிபுஞ்சயா பண்பாடு பின்னர் இலானா இராச்சியத்தின் (Lanna Kingdom) வளர்ச்சிக்கு வித்திட்டது. இந்த இலானா இராச்சியம் 13-ஆம் நூற்றாண்டில் தோன்றி 18-ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது.[4][5]
புவியியல்
[தொகு]வடக்கு தாய்லாந்து மேற்கில் சல்வீன் ஆற்றாலும் கிழக்கில் மீக்கோங் ஆற்றாலும் சூழப்பட்டுள்ளது. சாவோ பிரயா ஆற்றின் கிளையாறுகளான பிங் ஆறு, வாங் ஆறு, யோம் ஆறு, மற்றும் நன் ஆறு ஆகிய ஆறுகளின் படுகைகள் மத்திய பகுதியில் வடக்கு முதல் தெற்கு வரை பாய்கின்றன. இவை பெரும்பாலும் மிகவும் பரந்தவையாக உள்ளன.
இந்த ஆற்றுப் படுகைகள் இரண்டு பெரிய மலைத்தொடர்களைக் கடந்து செல்கின்றன; அவை மேற்குப் பகுதியில் உள்ள தானோன் மலைத்தொடர் (Thanon Range) மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள பி பான் நாம் மலைத்தொடர் (Phi Pan Nam Range) ஆகும். இவற்றின் உச்சி மலைச்சிகரங்கள் 2,000 மீட்டருக்கும் சற்றே அதிகமான உயரத்தைக் கொண்டுள்ளன. இந்த மலைகள் முன்பு காடுகளாக இருந்தபோதிலும், இப்போது இவற்றில் பெரும்பாலானவை மரங்கள் அழிக்கப்பட்டு மொட்டையாக காட்சி அளிக்கின்றன.[6]
இதன் மொத்த காடுகளின் பரப்பளவு 90,228 சதுர கி.மீ. (34,837 சதுர மைல்) ஆகும்; இது நான்கு நிலப்பகுதிகளின் மொத்த பரப்பளவில் 52.5 விழுக்காடு ஆகும்.[1]
தேசிய பூங்காக்கள்
[தொகு]வடக்கு பிராந்தியத்திற்குள் சுமார் அறுபது தேசிய பூங்காக்கள் உள்ளன. சியாங் மாய் மாகாணத்தில் ஒன்பது தேசிய பூங்காக்கள் உள்ளன, அவற்றில் நாட்டின் மிக உயர்ந்த மலையைக் கொண்டுள்ள டோய் இந்தனோன் தேசியப் பூங்கா ஒன்றாகும். ஆப் லுவாங் தேசிய பூங்கா (Op Luang National Park) இயற்கை எழில் கொஞ்சும் ஓர் ஆற்றுப் பள்ளத்தாக்கு, நீர்வீழ்ச்சிகள் மற்றும் குகைகளைக் கொண்டுள்ளது.
இலம்பாங் மாகாணம் மற்றும் இலம்புன் மாகாணம் ஆகிய இரண்டு மாகாணத் தலைநகரங்களுக்கு இடையே அமைந்துள்ள டோய் குன் டான் தேசிய பூங்கா (Doi Khun Tan National Park), தாய்லாந்தின் மிக நீளமான தொடருந்து சுரங்கப் பாதைக்கு (1,352 மீட்டர் நீளம்) பெயர் பெற்றது. நான் மாகாணத்தில் உள்ள டோய் பு கா தேசியப் பூங்கா (Doi Phu Kha National Park) வடக்கு தாய்லாந்தின் மிகப்பெரிய தேசிய பூங்காவாகும்.
நிருவாகம்
[தொகு]| கொடி | சின்னம் | மாகாணம் | தலை நகர் | உள்துறை அமைச்சு |
மக்கள் தொகை | பரப்பளவு (கிமீ2) | அடர்த்தி | ISO | |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| 1 | சியாங் மாய் | சியாங் மாய் | 14 | 1,779,254 | 22,135 | 79 | TH-50 | ||
| 2 | இலம்புன் | இலம்புன் | 54 | 405,075 | 4,478 | 92 | TH-51 | ||
| 3 | இலம்பாங் | இலம்பாங் | 53 | 738,316 | 12,488 | 59 | TH-52 | ||
| 4 | உத்தர ஆதித் | உத்தர ஆதித் | 75 | 453,103 | 7,906 | 58 | TH-53 | ||
| 5 | பிரே | பிரே | 41 | 441,726 | 6,483 | 68 | TH-54 | ||
| 6 | நான் | நான் | 26 | 478,227 | 12,130 | 40 | TH-55 | ||
| 7 | பாயோ | பாயோ | 34 | 472,356 | 6,189 | 76 | TH-56 | ||
| 8 | சியாங் ராய் | சியாங் ராய் | 13 | 1,298,304 | 11,503 | 113 | TH-57 | ||
| 9 | மே ஓங் சான் | மே ஓங் சான் | 45 | 284,138 | 12,765 | 23 | TH-58 | ||
| 10 | நக்கோன் சவான் | நக்கோன் சவான் | 23 | 1,059,887 | 9,526 | 111 | TH-60 | ||
| 11 | உத்தாய் தானி | உத்தாய் தானி | 76 | 328,618 | 6,647 | 50 | TH-61 | ||
| 12 | காம்யெங் பெட் | காம்யெங் பெட் | 5 | 725,867 | 8,512 | 86 | TH-62 | ||
| 13 | தாக் | தாக் | 17 | 665,620 | 17,303 | 39 | TH-63 | ||
| 14 | சுகோத்தாய் | சுகோத்தாய் | 66 | 595,072 | 6,671 | 89 | TH-64 | ||
| 15 | பித்சானுலோக் | பித்சானுலோக் | 38 | 865,247 | 10,589 | 82 | TH-65 | ||
| 16 | பிச்சித் | பிச்சித் | 37 | 536,311 | 4,319 | 124 | TH-66 | ||
| 17 | பெட்சாபுன் | பெட்சாபுன் | 40 | 992,451 | 12,340 | 80 | TH-67 | ||
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "ตารางที่ 2 พี้นที่ป่าไม้ แยกรายจังหวัด พ.ศ.2562" [Table 2 Forest area Separate province year 2019]. Royal Forest Department (in தாய்). 2019. Retrieved 6 April 2021.
- ↑ รายงานสถิติจำนวนประชากรและบ้านประจำปี พ.ส.2562 [Statistics, population and house statistics for the year 2019]. Registration Office Department of the Interior, Ministry of the Interior. stat.bora.dopa.go.th (in தாய்). 31 December 2019. Retrieved 26 February 2020.
- ↑ "Gross Regional and Provincial Product, 2024 Edition" (in en). Gross Regional and Provincial Product (Office of the National Economic and Social Development Council (NESDC)). பன்னாட்டுத் தர தொடர் எண்:1686-0799. https://www.nesdc.go.th/en/?p=107927&ddl=107925.
- ↑ Tan, Heidi (2012), "The Many Streams of Buddhist Art in Thailand", Enlightened Ways: The Many Streams of Buddhist Art in Thailand, Asian Art Museum of San Francisco, p. 13
- ↑ Smith, John (2019). State, Community, and Ethnicity in Early Modern Thailand, 1351-1767 (PDF) (Ph.D. dissertation). University of Michigan. p. 40. Retrieved 2023-04-08.
- ↑ Forest data: Thailand Deforestation Rates
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Northern Thailand வடக்கு தாய்லாந்து பற்றிய ஊடகங்கள்
விக்கிமூலத்தில் North (Thailand) வடக்கு தாய்லாந்து பற்றிய ஆக்கங்கள்