உள்ளடக்கத்துக்குச் செல்

வடக்கு சுலாவெசி

ஆள்கூறுகள்: 1°15′N 124°50′E / 1.250°N 124.833°E / 1.250; 124.833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கு சுலாவெசி
North Sulawesi
Province of North Sulawesi
Provinsi Sulawesi Utara
அலுவல் சின்னம் வடக்கு சுலாவெசி
சின்னம்
வடக்கு சுலாவெசி அமைவிடம்
Map
வடக்கு சுலாவெசி is located in இந்தோனேசியா
வடக்கு சுலாவெசி
      வடக்கு சுலாவெசி

ஆள்கூறுகள்: 1°15′N 124°50′E / 1.250°N 124.833°E / 1.250; 124.833
பகுதிசுலாவெசி
மாநிலம்வடக்கு சுலாவெசி
தலைநகரம்மனாடோ
பரப்பளவு
 • மொத்தம்13,892.74 km2 (5,364.02 sq mi)
 • பரப்பளவு தரவரிசை32-ஆவது
உயர் புள்ளி
1,995 m (6,545 ft)
மக்கள்தொகை
 (2023)[1]
 • மொத்தம்26,81,540
 • அடர்த்தி190/km2 (500/sq mi)
மக்கள் தொகை
 • இனக்குழுக்கள்[2]43% மினாகாசன்
23% சங்கீர்
17% மங்கோண்டோவ்
7.5% கோருந்தாலோ
3.2% சீனர்
6.3% மற்றவர்கள்
 • சமயம் (2023) [3]67.4% கிறிஸ்தவம்
-63% சீர்திருத்தத் திருச்சபை
-4.4% கத்தோலிக்க திருச்சபை
31.8% இசுலாம்
0.8% வேறு
 • மொழிகள்இந்தோனேசியம்
மனாடோ மலாய்
தொண்டெம்போவான், தொன்சியா, தொம்புலு, மொங்கோண்டோ, சங்கீரியம், தாலாவூட், பந்திக், ரதகான், பொனோசாகன்
நேர வலயம்இந்தோனேசிய நேரம் +7
HDI (2024)Increase 0.757[4]
 - வளர்ச்சி[5]Increase 5.42%
இணையதளம்sulutprov.go.id

வடக்கு சுலாவெசி (ஆங்கிலம்: North Sulawesi; இந்தோனேசியம்: Sulawesi Utara) என்பது இந்தோனேசியா, சுலாவெசி தீவில் உள்ள ஒரு மாநிலம் ஆகும். இதன் தலைநகரம் மனாடோ. இந்த நகரம், வடக்கு சுலாவெசி மாநிலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் விளங்குகிறது.

இந்த மாநிலம், பிலிப்பீன்சு தெற்கிலும்; மலேசியா, சபா மாநிலத்தின் தென்கிழக்கிலும்; சுலாவெசி தீவின் மினகாசா தீபகற்பத்தில் அமைந்துள்ளது. ஆனாலும் இந்த மாநிலம், மினகாசா தீபகற்பத்திற்கும் தெற்கு பிலிப்பீன்சுக்கும் இடையில் அமைந்துள்ள பல்வேறு சிறிய தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கியது.

பிலிப்பீன்சு மாநிலமான டாவோ ஆக்சிடெண்டல் மற்றும் சொக்ஸ்சர்ஜென் பகுதிகளையும், கிழக்கே மலுக்கு கடலையும், மேற்கே கோருந்தாலோ. சுலாவெசி கடலையும், தென்மேற்கே டோமினி வளைகுடாவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

புவியியல்

[தொகு]

வடக்கு சுலாவெசி மாநிலம் சுலாவெசி தீவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. புவி நிலை, புவி உத்திசார் நிலை, மற்றும் புவிசார் அரசியல் நன்மைகளைக் கொண்டுள்ள இந்தோனேசியாவின் மூன்று மாநிலங்களில் இந்த மாநிலமும் ஒன்றாகும். இது பசிபிக் விளிம்பில் அமைந்துள்ளது.

வடக்கு சுலாவெசியின் பெரும்பகுதி மலைப்பாங்கானது. மேலும் பல செயல்நிலை எரிமலைகளைக் கொண்டுள்ளது. சோபுடான் மலை; மற்றும் மினாகாசா தீபகற்பத்தில் 6,634 அடி (2,022 மீட்டர்) உயரத்தில் உள்ள கிளாபாட் மலைகளைக் குறிப்பிடலாம். கடலோர தாழ்நிலங்கள் குறுகியவையாக உளளன. இருப்பினும் அங்குள்ள மண் வளமானது. வேளாண்மைக்கு சிறந்த மண்வளத்தைக் கொண்டுள்ளது.[6]

மேலும் கடற்கரையில் பவளப்பாறைகள் உள்ளன. மிலாங்கோ ஆறு மற்றும் மார்சா ஆறு உட்பட பல வேகமாகப் பாயும் ஆறுகளால் மேட்டு நிலங்களுக்கு நீர்ப்பாசனம் கிடைக்கின்றது.[6]

அமைவு

[தொகு]
வடக்கு சுலாவெசி கடல், பசிபிக் பிலிப்பீன்சு
தெற்கு தொமினி வளைகுடா
கிழக்கு மலுக்கு கடல், மலுக்கு மாகாணம், வடக்கு மலுக்கு மாகாணம்
மேற்கு கோருந்தாலோ

மக்கள்தொகை

[தொகு]

வடக்கு சுலாவெசியின் மக்கள்தொகையில் மினாகாசன் சமூகத்தினர் மிகப்பெரிய பிரிவாக உள்ளனர். சாங்கிரியர் மற்றும் கோருந்தாலோ சமூகத்தினர் கணிசமான அலவிற்கு சிறுபான்மையினராக உள்ளனர்.

மகசாரியர், சீனர்கள், அரேபியர்கள், ஜாவானியர், பத்தாக் மற்றும் பல்வேறு மொலுக்கன் மக்கள் உட்பட பல சிறிய குழுக்களும் இந்த மாநிலத்தில் வசிக்கின்றனர். வடக்கு சுலாவெசியில் பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள்; இருப்பினும் இசுலாமும் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.

சமயம்

[தொகு]


வடக்கு சுலாவெசியின் சமயம்(2022)[7]

வடக்கு சுலாவெசியின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறார்கள். அதே நேரத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் இசுலாத்தைப் பின்பற்றுகிறார்கள்; சிறிய எண்ணிக்கையிலானவர்கள் இந்து சமயம் அல்லது பிற நம்பிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள்.

வடக்கு சுலாவெசியின் தீவுகள் மற்றும் மினாகாசாவின் மாவட்டம்; மற்றும் வடக்கு சுலாவெசியின் நகரங்களில் கிறிஸ்தவம் பிரதான மதமாக உள்ளது. அதே வேளையில் போலாங் மோங்கோண்டோ மாவட்டம்; மற்றும் நகரங்களில் இசுலாம் மிகப்பெரிய மதமாகும்.

காலநிலை

[தொகு]

காலநிலையைப் பொறுத்தவரை, கோருந்தாலோ மாநிலத்தைப் போலவே வடக்கு சுலாவெசி மாநிலத்திற்கும் காலநிலை உள்ளது. வடக்கு சுலாவெசி மாநிலம் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்திருப்பதால், அதிகமான வெப்ப காலநிலையைக் கொண்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை செப்டம்பரில் 22°C ஆகும். அதிகபட்ச வெப்பநிலை அக்டோபரில் 33°C வெப்பநிலையுடன் காணப்படுகிறது. 2013-ஆம் ஆண்டில் சராசரி வெப்பநிலை 26°C முதல் 27°C வரை இருந்தது.

வடக்கு சுலாவெசி மாநிலத்தில் ஒப்பீட்டளவில் அதிக ஈரப்பதம் உள்ளது. 2013-இல் சராசரி ஈரப்பதம் 86.5% விழுக்காட்டை எட்டியது. மே மாதத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு உள்ளது. அதாவது 307.9 மிமீ; ஆனால் அதிக மழை நாட்கள் சூலை மற்றும் திசம்பர் மாதங்களில் ஆகும்; அதாவது 24 நாட்கள்.

காட்சியகம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Provinsi Sulawesi Utara Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.71)
  2. Indonesia's Population: Ethnicity and Religion in a Changing Political Landscape, Institute of Southeast Asian Studies, 2003
  3. "Visualisasi Data Kependuduakan - Kementerian Dalam Negeri 2020". www.dukcapil.kemendagri.go.id. Retrieved 14 August 2021.
  4. "Indeks Pembangunan Manusia 2024" (in இந்தோனேஷியன்). Statistics Indonesia. 2024. Retrieved 15 November 2024.
  5. Badan Pembangunan Nasional (2023). "Capaian Indikator Utama Pembangunan". Jakarta: Badan Pembangunan Nasional.
  6. 6.0 6.1 "NorthMost of North Sulawesi is mountainous, with extensive uplifting and faulting, and it has many active volcanoes, notably Mount Soputan. Mount Klabat on the Minahasa Peninsula Sulawesi Indonesian Province, Culture & Wildlife | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). 26 February 2025. Retrieved 17 March 2025.
  7. "Jumlah Penduduk Menurut Agama" (in இந்தோனேஷியன்). Ministry of Religious Affairs (Indonesia). 31 August 2022. Retrieved 29 October 2023. Muslim 241 Million (87), Christianity 29.1 Million (10.5), Hindu 4.69 million (1.7), Buddhist 2.02 million (0.7), Folk, Confucianism, and others 192.311 (0.1), Total 277.749.673 Million

சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_சுலாவெசி&oldid=4230071" இலிருந்து மீள்விக்கப்பட்டது