வடகொரிய ஆட்சிப் பிரிவுகள்
'வடகொரிய ஆட்சிப் பிரிவுகள் மூன்று படிநிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பல தென்கொரிய ஆட்சிப் பிரிவுகளின் இணைகளைக் கொண்டுள்ளது. மேனிலையில் 9 மாநிலங்களும் இரண்டு நேரடி ஆட்சி மாநகரங்களும் மூன்று சிறப்பு ஆட்சிப் பிரிவுகளும் உள்ளன. அடுத்த நிலையில் மாவட்டங்கள், நகரங்கள், வட்டங்கள், சிறகங்கள் அமைகின்றன. இவை மேலும் மூன்றாம் நிலைப் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன:நகரங்களும் ஊர்களும் தொழிலாளர் மாவட்டங்களும் அமைகின்றன.
வடகொரிய முப்படிநிலை ஆட்சியியல் பிரிவு 1952இல் கிம் இல்-சங்கால் உள்ளூராட்சி மீள்கட்டமைப்பின்போது அறிமுகப்படுத்தப்பட்டது இதற்கு முன் இங்கு தென்கொரியாவைப் போன்ர பலபடிநிலை ஆட்சியியல் பிரிவு நிலவியது.
(ஆங்கிலப் பெயர்ப்புகள் அலுவல் பயன்பாட்டில் உள்ளவையல்ல. இவை மிக நெருங்கிய வடிவங்களே. இவை 2003 ஆம் ஆண்டு தேசியப் புவிப்பரப்பியல் இதழின் வடகொரியா நிலவரைப்படியானவை).
முதல் படிநிலைப் பிரிவுகள்
[தொகு](தோ; 도, 道) எனும் 9 மாநிலங்கள்/மாகாணங்கள் மரபான கொரியாவின் மாகாணங்களே ஆகும். இவை கொரியப் பிரிவினைக்குப் பின் மேலும் உள்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை நகரங்களும் ஊரக, மலைப் பகுதிகளும் அடங்கிய பெரும்பகுதிகளாகும். நேரடி ஆட்சியில் உள்ள நகரங்களாக (சிக்கால்சி; 직할시, 直轄市) நாம்போ, இரேசன் எனும் இருநகரங்கள் முந்தைய மாகாணங்களில் இருந்து பிரித்து மாநகரங்கள் ஆக்கப்பட்டன. இவையும் முதல் படிநிலை ஆட்சியியல் பிரிவுகளாகும். நேரடி ஆட்சியில் இருந்த பழைய நான்கு நகரங்கள் உரிய மாகாணங்களில் இணைத்து அவை மீளமைக்கப்பட்டன.
தென்கொரியாவுடனும் மற்ற நாடுகளுடனும் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ள 2002 இல் மூன்று சிறப்பு ஆட்சியியல் பகுதிகளும் உருவாக்கப்பட்டன. இவற்றில் இரண்டாம் மூன்றாம் படிநிலை ஆட்சிப் பிரிவுகள் அமையாது. சினூயி சிறப்பு ஆட்சிப் பகுதி சீனா முதலீட்டுக்காகவே ஏற்படுத்தப்பட்டது. என்றாலும் 2006வரை நடைமுறைக்கு வரவே இல்லை .
நிலவரை | குறிமுறை | பெயர் | Chosongul | Hanja |
---|---|---|---|---|
வார்ப்புரு:North Korea Provincial level Labelled Map | KP-01 | பியோங்யாங் தலைநகரம் | 평양직할시 | 平壤直轄市 |
KP-02 | தென்பியோங்கு மாகாணம் | 평안남도 | 平安南道 | |
KP-03 | வடபியோங்கு மாகாணம் | 평안북도 | 平安北道 | |
KP-04 | சாகாங்கு மாகாணம் | 자강도 | 慈江道 | |
KP-05 | தெற்கு ஃஉவாங்கே மாகாணம் | 황해남도 | 黃海南道 | |
KP-06 | வடக்கு ஃஉவாங்கே மாகாணம் | 황해북도 | 黃海北道 | |
KP-07 | Kangwon Province | 강원도 | 江原道 | |
KP-08 | தென் ஃஆம்கியாங்கு மாகாணம் | 함경남도 | 咸鏡南道 | |
KP-09 | வடஃஆம்கியாங்கு மாகானம் | 함경북도 | 咸鏡北道 | |
KP-10 | இரியாங்காங்கு மாகாணம் | 량강도 | 兩江道 | |
KP-13 | இரேசன் சிறப்பு நகரம் | 라선특별시 | 羅先特別市 | |
KP-?? | நாம்போ சிறப்பு நகரம் | 남포특별시 | 南浦特別市 |
இரண்டாம் படிநிலைப் பிரிவுகள்
[தொகு](குன்; 군, 郡) எனப்படும் நாடும் நேரடி ஆட்சியில் உள்ள நகரமும் இரண்டாம் படிநிலை ஆட்சியியல் பிரிவுகளாக அமைகின்றன. நாடு என்பது ஒரு மாநிலத்தில் உள்ள குறைந்த நகரமயமாக்கப் பகுதியாகும். மாநிலத்திலுள்ள மக்கள் செறிந்த மாவட்டங்கள் (சி; 시, 市) என்ற நகரங்கள் எனப்படுகின்றன. நம்போ நகரம் (தூக்கூப்சி; 특급시, 特級市) எனப்படும் சிறப்பு நகரமாகும். சில மாநிலங்கள் (கு, சிகு) எனும் இருவகை மாவட்டங்களைக் கொண்டுள்ளன.
நேரடி ஆட்சி நகரங்கள் (குயோக், தென்கொரியாவின் கு ( Gu) பிரிவுக்கு இணையானது.) எனும் சரகங்களாகப் (Wards) பிரிக்கப்படுகின்றன.
மூன்றாம் படிநிலைப் பிரிவுகள்
[தொகு]நாடுகள், நகரங்களின் ஊரகப் பிரிவுகள் ரி |리|, |里| எனப்படும் ஊர்களாகப் பிரிக்கப்படுகின்றன. நகரங்களின் புறநகர்கள் (தோங், 동, 洞) எனப்படுகின்றன. நாட்டின் மக்கள் செறிந்த பகுதி நகரியம் (ஊப், 읍, 邑) எனப்படுகிறது. சில நாடுகள் தொழிலாளர் மாவட்டங்களைக் (Rodongjagu) கொண்டுள்ளன.
தகவல் வாயில்கள்
[தொகு]The sources for this article are Chosun Ilbo's pages 행정구역 현황 ("Haengjeong Guyeok Hyeonhwang") பரணிடப்பட்டது 2008-03-29 at the வந்தவழி இயந்திரம் and 행정구역 개편 일지 ("Haengjeong Guyeok Gaepyeon Ilji") பரணிடப்பட்டது 2006-11-02 at the வந்தவழி இயந்திரம் (Korean only; updated 2004).
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- NKChosun administrative regions map பரணிடப்பட்டது 2004-08-03 at the வந்தவழி இயந்திரம்
- Administrative regions map பரணிடப்பட்டது 2005-10-25 at the வந்தவழி இயந்திரம், World Food Programme