வடகிழக்கு பருவமழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தென்மேற்கு பருவக்காற்று, வடகிழக்கு பருவக்காற்றோட்டங்கள்.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் இந்தியத் தீபகற்பத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் என்றழைக்கப்படுகின்றது. பின் பருவமழைக் காலம் என்று அழைக்கப்படுவதும் இக்காலமே. தென்னிந்தியத் தீபகற்பத்தின் முக்கிய மழைக்காலம் இதுவே -- குறிப்பாக கிழக்குப் பகுதியான கரையோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவை. தமிழ்நாட்டின் மிக முக்கிய மழைக்காலமான இப்பருவமழையின் போது மட்டும் வருடத்தின் மொத்த மழையளவில் 48 % சராசரியாகப் பொழிகிறது. தமிழகத்தின் கரையோரப்பகுதிகளில் 60 % மழையளவும் உள்மாவட்டங்களில் 40 - 50 % மழையளவும் இக்காலத்தில் பொழிகிறது.[1]

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் தொடக்கமும் மழையளவும்[தொகு]

(இராச)மன்னார்குடியில் வடகிழக்கு பருவமழை மேகத்திரள்
வருடம் தொடக்க தேதி பெய்த மழையின் அளவு (mm) சராசரி மழையளவு (mm) வேறுபாடு (%)
1990 19 அக்டோபர் 468 483 - 3
1991 20 அக்டோபர் 488 477 + 2
1992 2 நவம்பர் 514 470 + 9
1993 21 அக்டோபர் 784 479 479
1994 18 அக்டோபர் 534 418 + 12
1995 23 அக்டோபர் 260 479 - 46
1996 11 அக்டோபர் 592 477 + 24
1997 13 அக்டோபர் 810 478 + 70
1998 28 அக்டோபர் 619 478 + 30
1999 21 அக்டோபர் 517 483 + 7
2000 2 நவம்பர் 346 483 -28
2001 16 அக்டோபர் 382 483 -21
2002 25 அக்டோபர் 395 483 -14
2003 19 அக்டோபர் 435 469 -7
2004 18 அக்டோபர் 435 432 + 1
2005 12 அக்டோபர் 773 432 + 79
2006 19 அக்டோபர் 497 432 + 15
[2]

2014 ஆம் ஆண்டு[தொகு]

அக்டோபர் 18 அன்று தமிழ்நாடு, கேரளா, தென் ஆந்திரா, கருநாடகாவில் தொடங்கியது. [3]

2015 ஆம் ஆண்டு[தொகு]

அக்டோபர் 28 அன்று தொடங்கியது[4]

இதையும் காண்க[தொகு]

வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று


மேற்கோள்கள்[தொகு]

  1. india meteorological department
  2. imd chennai
  3. Northeast monsoon brings good rainfall to south India
  4. City can expect monsoon magic from today

வெளியிணைப்புகள்[தொகு]

  • செயற்கைக்கோள் படங்களுக்கு [1]
  • இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை [2]
  • மாவட்ட-வாரியாக மழையளவு [3]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடகிழக்கு_பருவமழை&oldid=1965507" இருந்து மீள்விக்கப்பட்டது