வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வடகிழக்கு பருவக்காற்று இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்றின் காரணமாக ஈரப்பதம் உள்ள காற்று வட இந்தியாவில் உள்ள காற்றை குளிர்ச்சியடைய வைக்கிறது. அதனால் வட இந்தியாவில் உள்ள காற்றின் அடர்த்தி அதிகமாகிறது. அதே சமயத்தில் இந்தியப்பெருங்கடல் பகுதி காற்று சூடாக உள்ளதால் அவை அடர்த்தி குறைவாக உள்ளன. இதனால் வட இந்தியாவில் இருந்து காற்று தெற்கு நோக்கி வீசத்தொடங்குகின்றன. வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி வீசுவதால் இக்காற்றை வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று என்கிறோம்.

அவ்வாறு வீசும் போது வங்காள விரிகுடாவில் இருந்து ஈரப்பதத்தை கொணரும் இக்காற்று தக்காண பீடபூமிக்கு மழையை கொண்டுவருகிறது. இந்தக்காற்றினால் கரையோர ஆந்திரப்பிரதேசம், இராயலசீமை, தமிழகத்தின் கரையோரம், பாண்டிச்சேரி மற்றும் இலங்கையின் கிழக்கு கரையோர பகுதிகள் மழை பெறுகின்றன.

தென்மேற்கு பருவக் காற்றினால் குறைந்த அளவு மழையை பெறும் தமிழக கரையோரப் பகுதிகள் வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்றினால் 60% மழையை பெறுகின்றன. [1]. தமிழகத்தின் உள் பகுதிகள் 40% - 50% மழையை வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்றினால் பெறுகின்றன[1]. தென்மேற்கு பருவக் காற்றினால் மழையைப்பெறும் கர்நாடகம், கேரளா, இலட்சத்தீவுகள் போன்றவை 20% மழையை வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்றினால் பெறுகின்றன[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 http://www.imdchennai.gov.in/northeast_monsoon.htm