வடகிழக்கு ஆயுர்வேதம் மற்றும் ஓமியோபதி நிறுவனம்
Appearance
வகை | தன்னாட்சி, சுகாதார நிறுவனம் |
---|---|
உருவாக்கம் | 2015 |
பணிப்பாளர் | பேராசிரியர் பிரதீப் குமார் கோசுவாமி |
அமைவிடம் | 25°35′40″N 91°56′54″E / 25.5945°N 91.9483°E |
வளாகம் | புறநகர் |
Acronym | NEIAH |
சேர்ப்பு | ஆயுஷ் அமைச்சகம் |
இணையதளம் | neiah |
வடகிழக்கு ஆயுர்வேதம் மற்றும் ஓமியோபதி நிறுவனம் (North Eastern Institute of Ayurveda and Homeopathy), என்பது இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் மேகாலயாவின் சில்லாங், மவ்டியாங்டியாங்கில் அமைந்துள்ளது. இதனை 22 திசம்பர் 2016 அன்று மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் யசோ நாயக் துவக்கிவைத்தார்.[1] இந்த நிறுவனம் 2016-17 கல்வியாண்டிலிருந்து தலா 50 மாணவர்களை பிஏஎம்எஸ் மற்றும் பிஎச்எம்எஸ் படிப்புகளில் சேர்க்கும் வகையில் ஆயுர்வேத மற்றும் ஓமியோபதி கல்லூரியைத் தொடங்கியுள்ளது [2]
2016ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை மற்றும் ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை ஆகியவற்றில் நான்கரை ஆண்டு பட்டப்படிப்பை இந்நிறுவனம் வழங்குகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://indianexpress.com/article/education/naik-inaugurates-northeast-institute-of-ayurveda-and-homeopathy/
- ↑ "North Eastern Institute of Ayurveda & Homoeopathy (NEIAH), Shillong, Meghalaya". neiah.nic.in. Retrieved 2021-01-18.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-05-30. Retrieved 2021-06-30.