உள்ளடக்கத்துக்குச் செல்

வஞ்சித்தளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வஞ்சித்தளை என்பது பண்டைய தமிழ்ப் பாடல்களில் பயின்றுவரும் தளைகளில் ஒன்று. இது 'கனி' வாய்பாட்டில் முடியும் சீரோடு 'நேர்' அல்லது 'நிரை' அசையில் தொடங்கும் சீர் வந்து தளையும் முறை.

வஞ்சித்துறைப் பாடல்
1
'மைசிறந்தன மணிவரை [1]
கைசிறந்தன காந்தளும் [2]
பொய்சிறந்தனர் காதலர்
மெய்சிறந்திலர் விளங்கிழாய்.'[3]
இந்த வஞ்சித்துறைப் பாடலில் இந்த வஞ்சித்தளை பயின்று வந்துள்ளதைத் காணலாம்.
வஞ்சித் தாழிசைப் பாடல்கள்
1
'மடப்பிடியை மதவேழம்
தடக்கையான் வெயின்மறைக்கும்.
இடைச்சுர மிறந்தார்க்கே
நடக்குமென் மனனேகாண்.
2
'பேடையை யிரும்போத்துத்
1தோகையால் வெயின்மறைக்கும்
காடக மிறந்தார்க்கே
ஓடுமென் மனனேகாண்.
3
'இரும்பிடியை யிகழ்வேழம்
பெருங்கையான் வெயின்மறைக்கும்
அருஞ்சுர மிறந்தார்க்கே
விரும்புமென் மனனேகாண்.' [4]
இந்த வஞ்சித் தாழிசைப் பாடல்களில் இந்த வஞ்சித்தளையினைக் காணலாம்.

அடிக்குறிப்பு

[தொகு]
  1. இடையில் 'கனி'ச்சீர் முன் 'நிரை'யசை வந்த வஞ்சித்தளை
  2. இடையில் 'கனி'ச்சீர் முன் 'நேர்'யசை வந்த வஞ்சித்தளை
  3. யாப்பருங்கலக் காரிகை நூற்பா 34 உரை மேற்கோள், பக்கம் 129
  4. யாப்பருங்கலக் காரிகை நூற்பா 34 உரை மேற்கோள், பக்கம் 128
"https://ta.wikipedia.org/w/index.php?title=வஞ்சித்தளை&oldid=1623691" இலிருந்து மீள்விக்கப்பட்டது