உள்ளடக்கத்துக்குச் செல்

வஜ்ரதாது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வஜ்ரயான பௌத்தத்தில் வஜ்ரதாது (சமஸ்கிருதம்:वज्रधातु, ஜப் kongōkai) என்பது ஐந்து தியானி புத்தர்கள் வசிக்கும் ஒரு மண்டலம் ஆகும். இந்த மண்டலம் வஜ்ரசேகர சூத்திரம் என்ற மறைபொருள்(Esoteric) பௌத்த சூத்திரத்தை அடிப்படையாக கொண்டு எழுந்தது ஆகும்.

அனைத்து மண்டலங்களுள் கர்பகோசதாதுவும், வஜ்ரதாதுவும் மிகவும் புகழ்பெற்றவை. இவ்விரு மண்டலங்களும் இணைந்து இரு பிரிவு மண்டலம் என்ற ஒன்றை உருவாக்குகின்றன. கர்பகோசதாதுவும் வஜ்ரதாதுவும் இணைந்து ஷிங்கோன் பௌத்த சடங்கான அபிஷேகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. பாரம்பரிய ஷிங்கோன் பௌத்த அறைகளும், இந்த கர்ப மண்டலத்தின் படம் கிழக்கு சுவரின் மாட்டப்படுகிறது. இது மஹாவைரோசன புத்தரின் போதியின் இளைய நிலையை குறிப்பதாக கருதப்படுகிறது. [1] அதே நேரத்தில் வஜ்ரதாதுவின் படம் மேற்கு சுவரின் மாட்டப்படுகிறது. இது வைரோசனரின் இறுதி நிலையை குறிப்பதாகும்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ibid., pg. 87

இவற்றையும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வஜ்ரதாது&oldid=3913398" இலிருந்து மீள்விக்கப்பட்டது