உள்ளடக்கத்துக்குச் செல்

வஜிரா சித்ரசேன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசமான்ய வஜிரா சித்ரசேன
වජිරා චිත්‍රසේන
தாய்மொழியில் பெயர்වජිරා චිත්‍රසේන
பிறப்புவஜிரா பெரேரா
(1932-03-15)15 மார்ச்சு 1932
காலி, பிாித்தானிய இலங்கை
இறப்பு23 செப்டம்பர் 2024(2024-09-23) (அகவை 92)
இலங்கை
மற்ற பெயர்கள்வஜிரா டயசு
கல்விமெதடிசுட் கல்லூரி, கொழும்பு
படித்த கல்வி நிறுவனங்கள்சிறீ பாலி வளாகம்
பணிநடனக் கலைஞர், நடன ஆசிரியர்
அமைப்பு(கள்)சித்ரசேனா-வஜிரா நடன அறக்கட்டளை
அறியப்படுவதுமுதல் இலங்கை பெண் கண்டி நடனக் கலைஞர்
வாழ்க்கைத்
துணை
சித்ரசேனா (திருமணம் 1951 – 2004) (அவரது மரணம்)
பிள்ளைகள்
  • உபேகா
  • அஞ்சலிகா
விருதுகள்பத்ம சிறீ (2020)

வஜிரா சித்ரசேன (Vajira Chitrasena)(தேசமான்ய வஜிரா சித்ரசேன) (15 மார்ச் 1932 – 23 செப்டம்பர் 2024) இலங்கை பாரம்பரிய நடனக் கலைஞரும், நடன அமைப்பாளரும் ஆசிரியரும் ஆவார்.[1] வஜிரா இலங்கையின் முதல் முதன்மை பாலே நடனக் கலைஞர் என்று கருதப்படுகிறார். பாரம்பரியமாக ஆண்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்டு வந்த கண்டி நடனத்தைப் பயின்ற முதல் இலங்கைப் பெண் இவரே.[2] கண்டி நடனத்தில் பெண் பாணிக்கான அடையாளத்தை உருவாக்கிய பெருமையும், பெண்கள் சடங்கு நடனக் கலைஞர்களாக மாறுவதற்கான வழியை அமைத்த பெருமையும் வஜிராவிற்கு உண்டு.[3] இவர் புகழ்பெற்ற பழம்பெரும் நடனக் கலைஞரும் நடன குருவுமான சித்ரசேனாவை மணந்தார்.[4]

26 சனவரி 2020 அன்று, இந்தியாவின் 71ஆவது குடியரசு தினத்தை ஒட்டி, மறைந்த பேராசிரியர் இந்திர தசநாயக்கவுடன் இணைந்து, இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.[5][6][7]

சுயசரிதை

[தொகு]

வஜிரா 1932 மார்ச்சு 15 அன்று பிறந்தார்.[8] இவர் கொழும்பில் உள்ள மெதடிஸ்ட் கல்லூரியில் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை முடித்தார். விபுலி மற்றும் மூத்த சகோதரி உட்பட அவரது சகோதரிகளும் நடனக் கலைஞர்களாக இருந்தனர். வஜிராவின் தாயார் (லில்லியன்), நடனம் பயில வஜிராவை கொரானாவில் உள்ள ஸ்ரீ பாலிக்கு அனுப்பினார்.[9]

1951ஆம் ஆண்டில், தனது 18 வயதில், இவர் தனது சக நடனக்கலைஞரான சித்ரசேனாவை மணந்தார். இவரது கணவர் 1943இல் சித்ரசேனா நடன நிறுவனத்தை நிறுவியிருந்தார்.[10] இவர்களுக்கு உபேகா மற்றும் அஞ்சலிகா என்ற இரண்டு மகள்கள் இருந்தனர்.

வஜிரா சித்ரசேன செப்டம்பர் 23, 2024 அன்று, தனது 92 வயதில் காலமானார்.[11]

தொழில்

[தொகு]

வஜிராவின் முதல் உள்நாட்டு தனி நடன நிகழ்ச்சி 1943இல் களுத்துறை நகர மண்டபத்தில் நடைபெற்றது. இவரும் இவரது கணவர் சித்ரசேனாவும் இணைந்து 1944இல் சித்ரசேனா-வஜிரா நடன அறக்கட்டளையை நிறுவினர். மேலும், 1959 முதல் 1998 வரை பலமுறை இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பல்வேறு கலை வடிவங்களைச் சேர்ந்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றினர்.[12] வஜிராவும் சித்ரசேனாவும் இந்தியாவுடனான தங்களின் நெருங்கிய பிணைப்பிற்காகவும், கலைத்துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் அறியப்பட்டனர்.[13] இவர் 1952இல் சண்டாலி என்ற பாலேவில் பிரகிருதி என்ற பாத்திரத்தில் தனி நடனக் கலைஞராக அறிமுகமானார். இவர் ஆசிரியராக மட்டுமல்லாமல், ஒரு கலைஞராகவும், நடன அமைப்பாளராகவும் அசைக்க முடியாத ஒழுக்கத்துடனும் அர்ப்பணிப்புடனும் நட்சத்திர மதிப்பைப் பெற்றார்.[14]

இவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்களுக்கு நடனம் கற்பித்தார். இவர் நில்மினி தென்னக்கூன் மற்றும் ஜீவரானி குருகுலசூரியா போன்ற சில முக்கிய நடிகைகளுக்கு நடனம் கற்பித்தார்.

கௌரவங்கள்

[தொகு]

வஜிரா மற்றும் சித்ரசேனா ஆகிய இருவரும் கலைத்துறையில் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளுக்காக 2004ஆம் ஆண்டில் ஈகிள் காப்பீட்டு நிறுவனத்தால் ஈகிள் சிறப்பு விருதை வென்றனர்.[15] 2013ஆம் ஆண்டில் மார்ச்சு 15ஆம் தேதி, இவரது 81ஆவது பிறந்தநாளில் இந்திய உயர் ஆணையத்தால் இவர் கௌரவிக்கப்பட்டார்.[16]

கலைத்துறையில் இவர் ஆற்றிய சாதனைகளுக்காக சனவரி 2020இல் பத்மசிறீ விருதுக்கு அறிவிக்கப்பட்டார். 2021ஆம் ஆண்டில் நவம்பர் 8 ஆம் தேதி நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இந்த விருதை வழங்கினார்.[17][18][19] 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கையர் பத்மசிறீ விருது பெற்று கௌரவிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.[20] 2021ஆம் ஆண்டில் நவம்பர் 17ஆம் தேதி, டெம்பிள் ட்ரீசில் நடைபெற்ற ஒ விழாவில் இந்திய உயர் ஆணையத்தில் அவருக்கு பத்மசிறீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.[21][22]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Devapriya, Uditha (5 February 2020). "Vajira". Medium (in ஆங்கிலம்). Archived from the original on 17 June 2020. Retrieved 11 May 2020.
  2. "Vajira Chitrasena: A story of peerless elegance". Sunday Observer (in ஆங்கிலம்). 8 March 2019. Retrieved 11 May 2020.
  3. "A life dedicated to dance". Daily News (in ஆங்கிலம்). Retrieved 11 May 2020.
  4. Kothari, Sunil (26 August 2019). "Sri Lankan dance legend Chitrasena: A contemporary of Uday Shankar". The Asian Age. Retrieved 11 May 2020.
  5. Srinivasan, Meera (26 January 2020). "Two Sri Lankan women receive Padma awards for contribution to arts, language teaching" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/international/two-sri-lankan-women-receive-padma-awards-for-contribution-to-arts-language-teaching/article30657532.ece.
  6. admin (26 January 2020). "Chitrasena, Dassanayake awarded highest civilian award in India | Colombo Gazette" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 11 May 2020.
  7. says, Laleenie Hulangamuwa (26 January 2020). "Lankans, Vajira Chitrasena and the Late Prof.Indra Dassanayake, get India's Padma Shri award". NewsIn.Asia (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 16 June 2020. Retrieved 11 May 2020.
  8. "ARTRA | Sri Lanka's Art & Design Magazine | OF SPIRITED LEGACY". www.artra.lk. Archived from the original on 26 September 2021. Retrieved 11 May 2020.
  9. "Destined to dance: Vajira looks back". Sunday Times (in ஆங்கிலம்). Retrieved 11 May 2024.
  10. "Vajira Chitrasena". www.island.lk. Retrieved 11 May 2020.
  11. Renowned dancer Vajira Chitrasena passes away at 92
  12. "Two Lankans conferred Padma Shri Awards". CeylonToday (in ஆங்கிலம்). Retrieved 11 May 2020.
  13. "What's the story behind the accolade?". www.themorning.lk. 2 February 2020. Retrieved 11 May 2020.
  14. MENAFN. "Sri Lanka- Chitrasena, Dassanayake awarded highest civilian award in India". menafn.com. Retrieved 11 May 2020.
  15. "BUSINESS TODAY -Eagle Insurance honors Chitrasena and Vajira". www.businesstoday.lk. Archived from the original on 26 September 2021. Retrieved 11 May 2020.
  16. "Felicitation of Dr. Vajira Chitrasena by the High Commission of India | Asian Tribune". www.asiantribune.com. Archived from the original on 18 March 2013. Retrieved 11 May 2020.
  17. "India honours Deshabandhu Dr. Vajira Chitrasena and Late Prof. Indra Dassanayake from Sri Lanka with Padma Shri Awards | Asian Tribune". www.asiantribune.com. Retrieved 11 May 2020.
  18. "India honours Deshabandu Dr. Vajira Chitrasena and late Prof. Indra Dassanayake". Daily FT.lk. 31 January 2020. Retrieved 11 May 2020.
  19. "India gives Padma awards to Lankan dancer Vajira Chitrasena and linguist the Late Indra Dassanayake". NewsIn.Asia (in அமெரிக்க ஆங்கிலம்). 9 November 2021. Retrieved 25 November 2021.
  20. "Two Sri Lankan women receive Padma awards". newsonair.com. Retrieved 11 May 2020.
  21. "Renowned Sri Lankan dancer Vajira Chitrasena conferred upon Padma Shri award". The New Indian Express. Retrieved 25 November 2021.
  22. Nadeera, Dilshan. "Indian High Commissioner hands over Padma Shri to Dr. Vajira Chitrasena" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 25 November 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வஜிரா_சித்ரசேன&oldid=4581678" இலிருந்து மீள்விக்கப்பட்டது