உள்ளடக்கத்துக்குச் செல்

வசுதேந்த்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசுதேந்த்ரா
பிறப்புசந்தூர், பெல்லாரி, கருநாடகம், இந்தியா
தொழில்எழுத்தாளர், பதிப்பாளர், நேஆ. நேபெ. இ. மா. செயற்பாட்டாளர்
கல்வி நிலையம்தேசிய தொழில்நுட்பக் கழகம் கர்நாடகம்
இந்திய அறிவியல் நிறுவனம்
வகைபுனைவு
குறிப்பிடத்தக்க படைப்புகள்தேஜோ-துங்கபத்ரா, மோகனசுவாமி, நம்மம்மா அந்ரே நன்கிஷ்டா
இணையதளம்
vasudhendra.com

வசுதேந்திரா (Vasudhendra) என்பவர் கன்னட மொழி சிறுகதை, கட்டுரை எழுத்தாளராவார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

வசுதேந்திரா கருநாடகத்தின் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள சந்தூரில் பிறந்தார்.[சான்று தேவை] இவர் கருநாடகத்தின் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பொறியியல் இளநிலைப் பட்டம் பெற்றார்.[1] பின்னர் இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் பொறியியல் முதுநிலைப் பட்டம் பெற்றார்.[சான்று தேவை] இவர் 20 ஆண்டுகளாக மென்பொருள் நிபுணராக இருந்தார்.[சான்று தேவை] இவர் ஜெனிசிஸ் மென்பொருள் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[சான்று தேவை]

பிரஜாவாணி உள்ளிட்ட பிற ஊடக நிறுவனங்களுக்கு அளித்த நேர்காணல்களில் வசுதேந்திரா, தன்னை ஓரினச்சேர்க்கையாளராகத் தெரிவித்தார்.[2]

சிறுகதைகள்

[தொகு]
  1. மனீஷே (1998)
  2. யுகாதி (2004)
  3. சேளு (2006)
  4. ஹம்பி எக்ஸ்பிரஸ் (2008)
  5. மோகனசாமி (2013)
  6. விஷம பின்னாராசி (2017)

கட்டுரைத் தொகுப்பு

[தொகு]
  1. கோதிகலு (2004)
  2. நம்மம்மா அந்தரே நங்கிஷ்டா (2006)
  3. ரக்ஷக அநாத (2010)
  4. வர்ணமாயா (2012)
  5. ஐது பைசே வரதண்சணே (2016)

புதினம்

[தொகு]
  1. ஹரிசித்த சத்ய (2010)
  2. தேஜோ-துங்கபத்ரா (2019)
  3. ரேஷ்மெ பட்டே (அக். 2024)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  1. மிதுன (2004) ( தெலுங்கில் இருந்து ஸ்ரீ ரமணரின் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு)
  2. எவரெஸ்ட் (2015) ( ஜான் கிராகௌரின் Into Thin Air நூலின் மொழிபெயர்ப்பு)

அறிவியல்

[தொகு]
  1. ஈ-காமர்ஸ்

பிரெய்லி மொழியில்

[தொகு]
  1. அத்ருஷ்ய காவ்யா (2006) (கட்டுரைத் தொகுப்பு)

ஆங்கில புத்தகங்கள்

[தொகு]
  1. Mohanaswamy (Harper Perennial, Nov 2016)
  2. The unforgiving city and other stories (Penguin India, Step 2021)

விருதுகளும் அங்கீகாரங்களும்

[தொகு]
  1. கருநாடக சாகித்ய அகாதெமி சாகித்யசிறீ விருது
  2. கருநாடக சாகித்ய அகாதெமி புத்தகப் பரிசு
  3. கலகநாத விருது
  4. த. ரா. பேந்திரே கதை விருது
  5. மஸ்தி கதை விருது
  6. உ. இரா. அனந்தமூர்த்தி விருது
  7. பெசகரஹள்ளி ராமண்ணா விருது
  8. வாசுதேவ பூபாலம் விருது
  9. வர்த்தமான உதயோன்முக விருது
  10. சதேமிடமிருந்து அம்மா விருது
  11. கதரங்கம் விருது

பதிப்பகம்

[தொகு]

இவர் சந்தா புஸ்தகா என்ற தனது சொந்த பதிப்பகத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் இவர் கன்னடத்தின் வளர்ந்து வரும் பல எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளார். இப்பதிப்பகம் இதுவரை சுமார் 100 புத்தகங்களை வெளியிட்டுள்ளது, மேலும் இந்த புத்தகங்கள் 100 இக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது. இவர் 'சந்த புஸ்தக பகுமான' என்ற விருதை நிறுவியுள்ளார். இது ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய, இளம் சிறுகதை எழுத்தாளரின் முதல் தொகுப்புக்கு ரொக்கப் பரிசுடன் வழங்கப்படுகிறது. இவர் தனது அனைத்து நூல்களையும் இந்த வெளியீட்டு நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார். மேலும் தனது பதிப்பகத்தின் விற்பனை, சந்தைப்படுத்தல் ஆகியவற்றை இவரே கவனித்துக்கொள்கிறார்.

பிற ஆர்வங்கள்

[தொகு]

மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட இவர் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மலையேற்றம் செய்துள்ளார். இவர் தான்சானியாவின் கிளிமஞ்சாரோ, திபெத்தின் கைலாசம், மானசரோவரம் போன்ற மலைகளில் மலையேற்றம் செய்துள்ளார். இவர் ஒரு ஸ்குவாஷ் விளையாட்டு வீரராவார். உலக திரைப்படம், மகாபாரதம், இந்திய பாரம்பரிய இசை ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பே தொலைக்காட்சி பார்ப்பதில்லை என்று முடிவு செய்தார், இன்றுவரை அதைப் பின்பற்றுகிறார்.

வசுதேந்திரா ஒரு தொழில்முறை ஆலோசகர் படிப்பை முடித்துள்ளார். இப்போதெல்லாம் தன் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகிறார் [குறிப்பு: இந்து கட்டுரை].

இவர் தயானந்த் சாகர் பொறியியல் கல்லூரியில் வருகை தரு பேராசிரியராக உள்ளார்.

நேஆ. நேபெ. இ. மா. செயல்பாடு

[தொகு]

வசுதேந்திரா, நேஆ. நேபெ. இ. மா. தனிமனிதர்களுக்கான உள்ளூர் ஆதரவுக் குழுவான குட்ஆஸ்யு எனப்படும் அமைப்புடன் தொடர்புடையவர். கருநாடகத்தில் ஓரினச்சேர்க்கையாளர் உரிமைகளுக்காக இவர் நிறைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். விஸ்வவாணிக்கு அண்மையில் அளித்த நேர்காணலில், பெரும்பாலான மக்கள் இனப்பெருக்கத்திற்காக மட்டுமல்ல, பொழுதுபோக்குக்காகவும் உடலுறவு கொள்கிறார்கள் என்றும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான அடக்குமுறை தலித்துகளுக்கு எதிரானது போன்றது என்றும் ஆரம்பகால இந்து நூல்களைக் குறிப்பிடுகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Only a good mind can produce good literature, says writer" (in en-IN). தி இந்து. 20 March 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Only-a-good-mind-can-produce-good-literature-says-writer/article14954665.ece. பார்த்த நாள்: 2 April 2018. 
  2. "ಮೋಹನಸ್ವಾಮಿ ಎನ್ನುವ ಮಿಥ್ಯೆಯೂ ನಿಜವೂ..." Prajavani (in கன்னடம்). 17 January 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசுதேந்த்ரா&oldid=4434518" இலிருந்து மீள்விக்கப்பட்டது