உள்ளடக்கத்துக்குச் செல்

வசுதா தோழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசுதா தோழர்
பிறப்பு1956
மைசூர், இந்தியா
கல்விஅரசு கவின்கலைக் கல்லூரி, சென்னை, கிராய்டன் கலை மற்றும் வடிவமைப்புக் கல்லூரி, ஐக்கிய இராச்சியம்
அறியப்படுவதுஓவியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்‘வலிக்கு அப்பால்-ஒரு மரணத்திற்குப் பின்’

வசுதா தோழர் (Vasudha Thozhur) ஓர் பல்துறைக் கலைஞராவார். முக்கியமாக ஓவியத்தில் கவனம் செலுத்துகிறார். தற்போது நொய்டாவிலுள்ள உள்ள சிவ நாடார் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் நிகழ்த்து கலைத் துறையில் பேராசிரியராக உள்ளார். 2022 குஜராத் வன்முறையில் இருந்து தப்பியவர்களுடன் இணைந்து செயல்படும் ஒரு அமைப்பான அகமதாபாத்தின் வத்வாவை தளமாகக் கொண்ட ஹிம்மத் என்ற ஆர்வலர் அமைப்புடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

1956 அக்டோபர் 14 அன்று மைசூரில் பிறந்தார்.[2] 1981-1997 இலிருந்து, சென்னையில் வசித்து வந்தார்.[3]

கல்வி

[தொகு]

வசுதா, சென்னையில் தனது கலைப்பயிற்சியைப் பெற்றார். 1979 ஆம் ஆண்டில், சென்னைலுள்ள அரசு கவின்கலைக் கல்லூரியில் ஓவியத்தில் சான்றிதழ் பட்டம் முடித்தார். பின்னர், ஐக்கிய இராச்சியத்தின் கிராய்டன் கலை மற்றும் வடிவமைப்புக் கல்லூரியில் ஓவியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2] 1988 ஆம் ஆண்டில், மத்திய லலித் கலா அகாதமியின் ஆராய்ச்சி உதவித் தொகையையும், 1989 ஆம் ஆண்டில், கலைஞர்களுக்கான கலாச்சார அமைச்சகத்தின் சகா என்ற விருதையும் பெற்றார். 1996 ஆம் ஆண்டில், இவர் பிரெஞ்சு அரசாங்கத்தின் உதவித்தொகையுடன் த சார்லஸ் வாலஸ் மானியத்தையும் ஆகியவற்றையும் பெற்றார்.

படைப்புகள்

[தொகு]

வசுதாவின் படைப்புகள் குஜராத் வன்முறையை அடிப்படையாகக் கொண்டவை. நரோடா படுகொலையிலிருந்து தப்பியவர்களுடன் இணைந்து ‘வலிக்கு அப்பால்-ஒரு மரணத்திற்குப் பின்’ என்ற தலைப்பில் ஒரு திட்டத்திற்காக பணியாற்றினார். கோஜ் பகுதியில் உள்ள ஒரு அமைப்பு இந்த திட்டத்திற்கு ஆதரவளித்தது.[4] இந்தத் திட்டத்திற்கு இந்திய கலை அறக்கட்டளை அமைப்பு நிதியுதவி அளித்தது. மேலும், ஹிம்மத் என்ற ஆர்வலர் அமைப்பும் ஆதரவளித்தது.[5] வசுதாவின் திட்டம் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் மன வேதயையும், அங்கு தப்பிப்பிழைத்தவர்களின் வாழ்க்கையில் படுகொலையின் விளைவுகளையும் சித்தரிக்கிறது.[6]

மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம், வடோதரா, அகமதாபாத் தேசிய வடிவமைப்பு நிறுவனம் மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனம் ஆகியவற்றில் ஆசிரியராகவும் கற்பித்துள்ளார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vasudha Thozhur «  KHOJ". khojworkshop.org. Archived from the original on 5 September 2017. Retrieved 2017-09-16.
  2. 2.0 2.1 "Vasudha Thozhur". Saffronart. Retrieved 2017-09-16.
  3. 3.0 3.1 "Artists". www.latitude28.com. Retrieved 2017-09-16.
  4. "Vasudha Thozhur | India Foundation for the Arts". www.indiaifa.org. Retrieved 2017-09-16.
  5. "Beyond Pain: An Afterlife | July 11 & 31, 2013 | Mumbai | India Foundation for the Arts". indiaifa.org. Archived from the original on 3 January 2018. Retrieved 2021-03-28.
  6. "Beyond pain". www.theweekendleader.com (in ஆங்கிலம்). Retrieved 2017-09-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசுதா_தோழர்&oldid=4395484" இலிருந்து மீள்விக்கப்பட்டது