வசுகா, குயோடோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வசுகா ( Wasuka,Kyota) என்பது சப்பான் நாட்டில் குயோடோ என்னும் பகுதிக்குத் தெற்கில், சொரக்கு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இங்கு தேயிலைத் தோட்டங்கள் அடர்ந்து உள்ளன. உயர்தரம் வாய்ந்த சப்பானிய தேயிலை வசுகாவில் பயிரிடப் படுகிறது.

2017 ஏப்பிரல் கணக்கீட்டின்படி இங்குள்ள மக்கள் தொகை 4130. [1]பரப்பளவு 64.87 சதுர கிலோமீட்டர் ஆகும்.

800 ஆண்டுகளாக இங்கு தேயிலைத் தொழில் நடைபெறுகிறது. 300 குடும்பங்கள் இந்தத் தேயிலைப் பயிரிடுதலில் ஈடுபடுகிறார்கள். உஜிசா வகை தேயிலை 3 விழுக்காடு உற்பத்தி செய்யப்பட்டாலும் இதன் தரமும் மணமும் உயர்ந்தது எனக் கருதப்படுகிறது.[2] மலைகள் சூழ்ந்துள்ள இந்த ஊர் பச்சைப் பசேலென ஆண்டு முழுக்க பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இங்கு நெல்லும் பயிரிடப்படுகிறது.

வசுகாவில் பண்ணை நிலம்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் சாகேங்கியோ திருவிழா இங்கு நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகள் இந்தத் திருவிழாவில் கலந்துகொண்டு வகைவகையான தேயிலைப் பண்டங்களை வாங்கியும் நுகர்ந்தும் செல்கிறார்கள்.

மேற்கோள்[தொகு]

  1. "Official website of Wazuka Town" (Japanese). Japan: Wazuka Town. பார்த்த நாள் 28 April 2017.
  2. http://www.obubutea.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசுகா,_குயோடோ&oldid=2384587" இருந்து மீள்விக்கப்பட்டது