வசந்த் அண்ட் கோ
வசந்த் அண்ட் கோ, புரசைவாக்கம், சென்னை, தமிழ்நாடு | |
வகை | கூட்டு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1978 |
நிறுவனர்(கள்) | எச். வசந்தகுமார் |
சேவை வழங்கும் பகுதி | தமிழ்நாடு, புதுச்சேரி, பெங்களூரு |
தொழில்துறை | சில்லறை விற்பனை |
சேவைகள் | வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு உபகரணங்கள், கைப்பேசிகள், மடிக்கணினிகள் |
பணியாளர் | 1,000 |
வசந்த் அண்ட் கோ என்பது இந்தியாவில், தமிழ்நாட்டின் சென்னையைத் தலைமையகமாகக் கொண்ட, 'இந்திய சில்லறை விற்பனை சங்கிலித் தொடர் விற்பனை நிலையங்களில்' ஒன்றாகும்.[1] வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு உபகரணங்கள், கைப்பேசிகள், மடிக்கணினிகள் ஆகியவற்றை விற்பனை செய்யும் நிறுவனமாக 'வசந்த் அண்ட் கோ' திகழ்கிறது.
சென்னையில் அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 31.36 மீ. உயரத்தில், (13°05′10″N 80°14′59″E / 13.0861°N 80.2496°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, சென்னையின் புரசைவாக்கம் பகுதியில் வசந்த் அண்ட் கோ அமையப் பெற்றுள்ளது.
விபரங்கள்
[தொகு]1978 ஆம் ஆண்டு இந்நிறுவனம் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நிறுவனர் காலஞ்சென்ற எச். வசந்தகுமார் ஆவார். சுமார் ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்ட இந்நிறுவனம் பல இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது.[2]
2021 ஆம் ஆண்டு 44 வருடங்கள் பணியாற்றிய பெருமையைப் பெற்ற இந்நிறுவனத்தின் கிளைகள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ளன.[3]
தற்போது ஆண்டுக்கு ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும் நிறுவனங்களில் ஒன்றாக இந்நிறுவனம் விளங்குகிறது.[4]
120ஆவது கிளை
[தொகு]2024 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இந்நிறுவனம் 120 கிளைகளைக் கொண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள், இந்நிறுவனத்தின் 120 ஆவது கிளை திருத்தணியில் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ சதீஷ் கிருஷ்ணமூர்த்தி / Satheesh Krishnamurthy (2005-12-01). மார்க்கெட்டிங் மாயாஜாலம் / Marketing Maayaajaalam (in ஆங்கிலம்). Kizhakku. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8368-103-2.
- ↑ "எப்படி உருவானது வசந்த் அண்ட் கோ? வசந்தகுமார் கடந்த வந்த பாதை!". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2024-10-04.
- ↑ "அதிரடி ஆஃபர்கள்! 44-ஆம் ஆண்டில் வசந்த் அன் கோ!". www.vikatan.com. 2021-07-20. பார்க்கப்பட்ட நாள் 2024-10-04.
- ↑ க.இப்ராகிம் (2024-01-13). "Vasanth & Co உருவான வரலாறு!". Kalki Online. பார்க்கப்பட்ட நாள் 2024-10-04.